சட்டவிரோத மின் பயன்பாட்டை மறைக்க லஞ்சம் : சிக்கிய மின்வாரிய ஊழியர்
கடையநல்லூர் அருகே மின்சாரத்தை சட்ட விரோதமாக பயன்படுத்திய விவசாயிடம் குற்றத்தை மறைக்க லஞ்சம் வாங்கிய மின்வாரிய லைன்மேனை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள திரிகூடபுரத்தை பகுதியை சேர்ந்த சுந்திரபாண்டி என்பவரின் மகன் முருகேசன் (42) . இவர் தனது தந்தையின் பெயரில் உள்ள சுமார் 6-1/2 ஏக்கர் நிலத்தில் தென்னை விவசாயம் செய்து வருவதாகவும், விவசாயத்திற்காக இலவச மின் இணைப்பு பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், மின்சார பயன்பாடு…
