Headlines

மு.க.ஸ்டாலின் என் Sweet Uncle : மதுராந்தகத்தில் முதலமைச்சர் விஜய்

மு.க.ஸ்டாலின் என் Sweet Uncle : மதுராந்தகத்தில் முதலமைச்சர் விஜய்

மதுராந்தகத்தில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதல்வர் ஜோசப் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது,
முதல்வராக நான் இன்று வரவில்லை, இடைத்தேர்தலுக்காக ஓட்டு கேட்டு வந்துள்ளேன்; எப்பவும் போல் உங்கள் வீட்டு மகனாக அண்ணனாக தம்பியாக வந்துள்ளேன்.

ஏன் உங்கள் விஜய் ஆட்சிக்கு வரக்கூடாதா? தவெக ஆட்சிக்கு வரக்கூடாதா? தனிக்கட்சியாக, பெண்கள், இளைஞர்கள் ஆதரவோடு, லஞ்சம், ஊழலை ஒழிக்க உங்கள் விஜய் ஆட்சிக்கு வரக்கூடாதா?

ஏன் இந்த திமுக.
ஸாரி, கொஞ்சம் டச் விட்டுருச்சு, இந்த தீய சக்தி. ஓம் சக்தி, பராசக்தி. இந்த தீய சக்தியால் ஆபாச நதியாக ஓடுகிறது.

நாட்டில் ஒரே ஆபாச நதியாக ஓடிக்கொண்டிருப்பதை மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். திமுகவில் பெரிய பொறுப்பில் உள்ளவர்கள் ஆபாசமாக பேசுவதை மக்கள் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.

திமுகவிற்கு மறைமுகமாக மற்றும் பலர் உதவுகிறார்கள். மற்றும் பலர் யார் தெரியுமா? அதிமுக தான். ஜெ., பற்றி தவறாக பேசியவர்களுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முயன்றவர்களின் முகமூடி கிழிந்தது தெரியாமல் கூவிக் கொண்டிருக்கிறார்கள். யார் என்ன கூவினாலும், நம்ம ரூட் ஸ்ட்ரைட் ரூட்.

108 இடங்களில் வென்ற த.வெ.க.,வை ஆட்சி அமைக்க விடாமல் தடுக்க தி.மு.க.,வுடன் இணைந்து அதிமுக முயற்சி செய்தது. பா.ஜ.க.,வின் கிளையாக இருந்த அ.தி.மு.க தற்போது தி.மு.க.,வின் கிளையாகியுள்ளது.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை வார்த்தைக்கு வார்த்தை தீயசக்தி என சொன்ன திமுகவுடன் இணைந்து ஆட்சியமைக்க முயற்சிப்பதா?

எம்.ஜி.ஆர் கொள்கைக்கு மாறாக செயல்படும் வலியை தாங்க முடியாமல்தான் அதிமுகவில் இருந்து மரகதம் குமரவேல் விலகினாா்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை போல் விஜய்க்கும் தீய சக்தி திமுகதான் எதிரி. எம்.ஜி.ஆர் தொண்டர்களுக்காக நான் இருப்பேன்.

முதல்வா் என்பவா் மக்களுக்கு முதலாளி அல்ல, சா்வன்ட் தான், ஆனால் தமிழ்நாட்டிற்கே முதலாளி போல் ஸ்டாலின் பேசுகிறாா்.

இலவச சிலிண்டா் விவகாரத்தில் மக்களை தூண்டிவிட்டு கேள்வி எழுப்ப திமுக திட்டமிட்டது, ஆனால் மக்கள் அவர்களது முகத்தில் காியை பூசினா்.

நான் சினிமாவில் ஜெயித்ததற்கும், இன்று அரசியலில் ஜெயித்ததற்கும் தமிழ்நாட்டில் உள்ள என் உறவுகள்தான் காரணம்.

இன்ஸ்பெக்சனுக்கு சென்றால், நாங்கள் கட்டிய பாலத்தின் மீது நின்று ஷுட்டிங் எடுக்கிறார் விஜய் என விமர்சிக்கிறார் ஸ்டாலின்

நீங்கள் என்ன உங்கள் சொந்த பணத்திலிருந்தா பாலம் கட்டினீர்கள்? அல்லது கணக்கில் காட்டாத பணத்தை வைத்து கட்டினீர்களா?.

ஊழல் புகாா் கூறினால் ஆதாரத்தை காட்டுங்கள் என்கிறாா்கள், காட்டினால் இது செல்லாது என்கிறாா்கள்.

50 வருடங்களுக்கு முன்பு உள்ள கதையெல்லாம் இப்போது உள்ள பிள்ளைகளுக்கு தொியாதே என பதட்டப்படுகின்றனா்.

அவா்கள் செய்த ஊழல் எல்லாம் இப்போது உள்ள பிள்ளைகளுக்கு தொிந்தால் மிஸ்டா் கிளீன் இமேஜ் போய் விடும் என பயம்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோற்றாலும் ஜெயிச்சாலும் அவர் என் Uncle. அவர் என் Sweet Uncle.

மக்களுக்கு நல்லது செய்யவே கடன் வாங்குகிறேன்; கொள்ளையடிப்பதற்காக அல்ல நான் வளர்ச்சிக்கு எதிரானவன் இல்லை; என்னால் எதைச் செய்ய முடியுமோ அதைச் செய்து வருகிறேன்.

கடன் வாங்குகிறேன் எதற்காக?” மக்களுக்கு நல்லது செய்வதற்காக… கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்ற வேண்டுமென்பதற்காக தான். என முதல்வர் விஜய் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *