Headlines

பேஸ்புக் மூலம் பழக்கம்,14 வயது சிறுமியுடன் திருமணம் : இளைஞருக்கு 20 ஆண்டு சிறை

பேஸ்புக் மூலம் பழக்கம்,14 வயது சிறுமியுடன் திருமணம் : இளைஞருக்கு 20 ஆண்டு சிறை

பேஸ்புக் மூலம் பழக்கமான 14 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும் ரூ2 ஆயிரம் அபராதமும் விதித்து சிவகங்கை போக்சோ நீதிமன்றம்
தீர்ப்பளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவல்லிக்கேனியை சேர்ந்தவர் 26 வயதான கார்த்திக்கேயன். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு பேஸ்புக் மூலம் காரைக்குடியை சேர்ந்த 9 ஆம் வகுப்பு பயின்று வந்த 14 வயது சிறுமியுடன் பழக்கமாகி அவரை திருப்பூருக்கு அழைத்து சென்று திருமணம் செய்துள்ளார்.

இது குறித்து சிறுமியின் தாத்தா காரைக்குடி அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

இதனை அடுத்து கார்த்திக்கேயன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த காவல்துறை அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரனை சிவகங்கை ஒருங்கினைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி ரோகிணி, கார்த்திக்கேயனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும் ரூ 2 ஆயிரம் அபராதமும் விதித்து அதிரடியாக தீர்ப்பளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *