உடுமலை உழவர் சந்தை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி விவசாயிகள் போராட்டம்
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை உழவர் சந்தை முன்பு உள்ள ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றக் கோரி விவசாயிகள் இன்று காலை திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உழவர் சந்தைக்கு வெளியிலும் 500 மீட்டர் சுற்றளவிலும் அரசு விதிகளை மீறி செயல்படும் காய்கறிக் கடைகளால், சந்தைக்குள் காய்கறி விற்கும் சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து கடந்த 28-ம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து, காபூர்…
