கோதையாற்றில் உலாவரும் முதலை :பொதுமக்கள் பீதி
கன்னியாகுமரி மாவட்டம் கோதையாற்றில் தொடர்ந்து தென்படும் முதலையை பிடிக்க முடியாமல், களியல் வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். முதலையை பிடிக்க சிறப்பு குழுவும் வரவழைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கோதையாற்றில் முதலை பல்வேறு கோணங்களில் நீந்தும் காட்சிகள் எனக் கூறி புகைப்படக் கலைஞர் ஒருவர் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனால் பொதுமக்கள் மத்தியில் மீண்டும் அச்சம் ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கோதையாறு பாய்ந்து செல்லும் பகுதிகளில் ஆங்காங்கே ஏராளமான பொதுமக்கள் குளிப்பது வழக்கம்…
