Headlines

தண்டவாள பராமரிப்பு : புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்

தண்டவாள பராமரிப்பு : புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்

கிண்டி ரயில் நிலைய தண்டவாள பராமரிப்பால் இன்று முதல் சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை – தாம்பரம் (இரவு 11.59 மணி) : சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.59 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், சனிக்கிழமை (செப். 26) முதல் அக்டோபர் 3-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

தாம்பரம் – சென்னை கடற்கரை (இரவு 8.45 மணி): தாம்பரத்திலிருந்து இரவு 8.45 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், செப்டம்பர் 26, 28, 29, 30 மற்றும் அக்டோபர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
தாம்பரம் – சென்னை கடற்கரை (இரவு 11.40 மணி): தாம்பரத்திலிருந்து இரவு 11.40 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், ஞாயிற்றுக்கிழமை மட்டும் ரத்து செய்யப்படுகிறது.

இரவு நேரங்களில் பயணிக்கும் பயணிகள் இம்மாற்றங்களைக் கவனத்தில் கொண்டு தங்களது பயணங்களைத் திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *