திருப்பெரும்புதூர் அருகே மாதா சிலை உடைப்பு: கிறிஸ்தவர்கள் சாலை மறியல்
காஞ்சிபுரம், May 25 : திருப்பெரும்புதூர் அருகே உள்ள பண்ருட்டி கிராமத்தில், வழிபாட்டுத் தலத்தின் நில உரிமை விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மாதா சிலை உடைக்கப்பட்டதாகக் கூறி, அப்பகுதி கிறிஸ்தவர்கள் திங்கள்கிழமை வண்டலூர் – வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறை மற்றும் உள்ளூர் தரப்பில் கூறப்படுவதாவது: காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அடுத்த பண்ருட்டி கிராமத்தில் வசிக்கும் கிறிஸ்தவ சமூகத்தைச்…
