Headlines

ஓய்வு பெற்ற பெண் தலைமை ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 80 பவுன் நகைகள் திருட்டு : போலீசார் விசாரணை

ஓய்வு பெற்ற பெண் தலைமை ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 80 பவுன் நகைகள் திருட்டு : போலீசார் விசாரணை

பெரம்பலூர் அருகே குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம்
கிராமத்தில், போஸ்ட் ஆபீஸ் எதிரே வசித்து வருபவர் ஆரோக்கியராஜ்
மனைவி தேவசகாய சுந்தரி என்கிற ராஜலெட்சுமி (60).
கடந்த 2006ஆம் ஆண்டு கணவர் உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார். ராஜலெட்சுமிக்கு ஷெர்லி ஜாய் சிந்தியா(33), எட்வர்டு சகாயராஜ்(30) ஆகிய 2 பிள்ளைகள் உள்ளனர்.
இருவரும் சென்னையில்
வேலைபார்த்து வருகிறார்கள்.

தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வந்த ராஜ லட்சுமி ஓராண்டுக்கு முன்பாக பணி ஓய்வு பெற்றபிறகு, பாளையம் கிராமத்தில் சொந்தமாக புதிய வீடு கட்டி, கடந்த 4 மாதமாக புது வீட்டில் குடியிருந்து வருகிறார்.

இந்நிலையில்
ராஜலட்சுமி கடந்த 10ஆம் தேதி சென்னையில் உள்ள மகளை பார்க்க சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை ராஜலட்சுமியின் சகோதரர்
அருகே உள்ள வீட்டில் வசிக்கும் ஆசிரியர் செல்வக்குமார், தனது சகோதரி வீட்டின் கதவுகள் திறந்து கிடப்பதை கண்டு உள்ளேசென்று பார்த்தபோது,
இரவில் வீட்டின் கதவு தாழ்ப்பாள்களை இரும்பு கம்பியால் உடைத்து, உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் இருந்த இரண்டு பீரோக்களையும் உடைத்து,
திருடு போனது தெரியும் வந்தது இது குறித்து ராஜலட்சுமிக்கு தகவல் தெரிவித்த போது, அதில் ராஜலட்சுமி தனது மகனின் திருமண செலவுக்காக சேமித்து
வைத்திருந்த 80 பவுன் நகைகளை திருடிச் சென்றுள்ளது தெரிய வந்தது.

இதுகுறித்து பெரம்பலூர் ஊரக காவல்நிலைய போலீசாருக்கு கொடுக்கப்பட்ட தகவலை தொடர்ந்து, சம்பவ இடத்திற்குவந்த போலீசார் கைரேகை மற்றும் மோப்பநாய் யுடன், ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். பாளையம் கிராமத்தின் நுழைவுப் பகுதியான மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில், பூட்டியிருந்த வீட்டை நோட்டமிட்டு
ரூ.90 லட்சம் மதிப்பிலான 80 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *