திருப்பத்தூர் அருகே
சாலை வசதி சரியில்லாததால் கர்ப்பிணி பெண்ணை திருப்பத்தூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வந்த 108 வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இறங்கியது. அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் மற்றும் கர்ப்பிணி பெண் உயிர் தப்பினர்.
திருப்பத்தூர் மாவட்டம் பெரியகம்பியம்பட்டு ஊராட்சி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரியா்
பிரசவ வலியால் துடித்த நிறைமாத கர்ப்பிணியான இவரை மருத்துவமனை அழைத்து செல்ல 108 வாகனம் வரவழைக்கப்பட்டது.
கர்ப்பிணி பெண்ணை ஏற்றிக்கொண்டு சிறிது தொலைவு 108 வாகனம் சென்ற பொழுது சாலை வசதி சரியில்லாததால் கட்டுபாட்டை இழந்து சாலை ஓரத்தில் சாய்ந்து நின்றது. அப்போது ஓட்டுநர் சமார்த்தியமாக செயல்பட்டு வாகனம் கவிழ்ந்து விடாமல் நிறுத்தினார்.
இதனால் ஓட்டுநர் மற்றும் வாகனத்தில் இருந்த நிறைமாத கர்ப்பிணி ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
பின்னர் மாற்று வாகனத்தில் மருத்துவமனைக்கு நிறைமாத கர்ப்பிணியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
