அன்னவாசல் அருகே கி.மு.6-ம் நூற்றாண்டு தொல்பொருட்கள் கண்டெடுப்பு
அறந்தாங்கி அரசுக் கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவர் மற்றும் தொல்லியல் வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் முனைவர் காளிதாஸ் பேராசிரியர் மணிவண்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் புதுக்கோட்டை அன்னவாசல் ஒன்றியம் வெள்ளாஞ்சார் கிராமத்தில் வரலாற்றுக் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சாலை ஓரத்தில் உள்ள திடல் ஒன்றில் ஐயனார் சிலை ஒன்று இருப்பதைக் கண்டறிந்தனர். ஐயனார் உட்குடி ஆசனத்தில் அமர்ந்து, இடது காலையும் இடுப்பையும் இணைக்கிற யோகப்பட்டையை அணிந்துள்ளார். காதோலைச் சுருள், கைக்காப்பு, கழுத்தணி, கண்ட…
