Headlines
ஜெம் வீரமணி வழக்கு : ஊடக விவாதங்கள் நடத்த தடை - சென்னை உயர்நீதிமன்றம்

ஜெம் வீரமணி வழக்கு : ஊடக விவாதங்கள் நடத்த தடை – சென்னை உயர்நீதிமன்றம்

ஜெம் வீரமணி POCSO வழக்கு தொடர்பாக ஊடக விவாதங்கள் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியானது குறித்து விசாரிக்கக் கோரி துளிர் அறக்கட்டளை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிபதி வி.லட்சுமிநாராயணன் இந்த உத்தரவை பிறப்பித்தார். இந்த விவகாரத்தின் தீவிரத்தன்மை தெரியாமல், ஊடகங்கள் செயல்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட யாரும் புகாரளிக்க முன்வரமாட்டார்கள்.பத்திரிகை சுதந்திரம் என்பது ஊடக விசாரணை நடத்துவதற்கான உரிமை அல்ல. ஜெம் வீரமணி மீதான வழக்கில் தொடர்புடைய…

Read More
இந்து முன்னணி நிர்வாகி சசிக்குமார் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

இந்து முன்னணி நிர்வாகி சசிக்குமார் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

கோவையை சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகி சசிக்குமார் கொலை கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. கோவை துடியலூர் அடுத்த சுப்பிரமணியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவர் கோவை மாவட்ட இந்து முன்னணி பேச்சாளராகப் பணியாற்றினார். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய போது, மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கோவையில் பெரும் பதற்றமும், வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறின. ஆரம்பத்தில்…

Read More
இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு - கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு – கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கடந்த 2016 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இதையடுத்து கோவை மாநகரில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. பூந்தமல்லி NIA சிறப்பு நீதிமன்றம் சசிக்குமார் கொலை வழக்கை விசாரித்து வருகிறது.இந்த வழக்கில் இன்றுதீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதையடுத்து கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Read More
மாநகராட்சி ஆணையர்கள் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

மாநகராட்சி ஆணையர்கள் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, கோவை, ஈரோடு மாநகராட்சிகளின் ஆணையர்கள் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்து வரி தொடர்பான வழக்குகளில் மாநகராட்சிகளின் வழக்கறிஞர்கள் ஆஜராகாததால் நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் சொத்து வரி உயர்வு தொடர்பாக பல்வேறு மாநகராட்சி தொடர்பான வழக்குகள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.மாநகராட்சிகள் சார்பில் பதிலளிக்க பலமுறை அவகாசம் வழங்கியது. மாநகராட்சிகள் சார்பில் யாரும்ஆஜராகவில்லை. ஈரோடு மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின்,சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி. எஸ் சமீரன்…

Read More
ஆகாஷ் மரண வழக்கு : 6 காவலர்களுக்கும் நிபந்தனை ஜாமீன்

ஆகாஷ் மரண வழக்கு : 6 காவலர்களுக்கும் நிபந்தனை ஜாமீன்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த ஆகாஷ், கடந்த மார்ச் 8ஆம் தேதி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். ஆகாஷ் காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்ததாகக் கூறப்படும் இந்த வழக்கில், சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி 6 காவலர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். ஆகாஷ் உயிரிழந்தது முதல் 6 காவலர்களும் வெளியிலேயே இருந்து வந்த நிலையில், தற்போது முதன்முறையாக நீதிமன்றத்தில் ஆஜராகினர். சிவகங்கை மாவட்ட எஸ்.சி./எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், இதுவரை சிபிசிஐடி…

Read More
இறந்த கணவரின் கடனுக்கு மனைவி பொறுப்பல்ல : எஸ்.பி.ஐக்கு உயர் நீதிமன்றம் வைத்த குட்டு

இறந்த கணவரின் கடனுக்கு மனைவி பொறுப்பல்ல : எஸ்.பி.ஐக்கு உயர் நீதிமன்றம் வைத்த குட்டு

கணவர் கடன் பெற்றுவிட்டு உயிரிழந்த நிலையில், அவரது மனைவி அந்தக் கடனுக்கு பொறுப்பாக மாட்டார் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கணவர் இறந்த நிலையில், அவர் பெற்ற கடனுக்காக, மனைவியின் வைப்பு நிதிக் கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட ரூ.19.90 லட்சத்தை வட்டியும் முதலுமாக, அவரது வங்கிக் கணக்கில் திரும்ப செலுத்துமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. கணவர் பெற்ற கடனுக் காக, மிக வெறுக்கத்தக்க வகையில், வங்கி நடைமுறை அமைந்திருப்பதகாவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக் கிறது. கடன்…

Read More
சிலைகள் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவு : குவிக்கப்பட்ட போலீசார்

சிலைகள் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவு : குவிக்கப்பட்ட போலீசார்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே, முள்ளங்காடு கிராமத்தில் சுமார் 10 ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டிருந்த விநாயகர், அய்யனார், பூரணித்தாள், பொற்கொடியாத்தாள் மற்றும் கருப்பசாமி ஆகிய 5 ஐம்பொன் உற்சவர் சிலைகள் இன்று அதிகாரிகளால் மீட்கப்பட்டு, புளியங்குடியிருப்பு கிராம மக்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதையொட்டி முள்ளங்காடு மற்றும் புளியங்குடியிருப்பு ஆகிய இரு கிராமங்களிலும் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காரைக்குடி அருகே உள்ள முள்ளங்காடு மற்றும் புளியங்குடியிருப்பு கிராம மக்கள் பாரம்பரியமாக இணைந்து திருவிழா நடத்தி வந்ததாக…

Read More
எ.வ.வேலுவின் வெற்றி செல்லும் : உயர் நீதிமன்றம்

எ.வ.வேலுவின் வெற்றி செல்லும் : உயர் நீதிமன்றம்

திருவண்ணாமலை திமுக எம்எல்ஏ எ.வ.வேலுவுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவரது வெற்றியை எதிர்த்து தவெக வேட்பாளர் அருள் ஆறுமுகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று எ.வ.வேலு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விவாரித்த மனுவை விசாரித்த நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி,…

Read More
எம்எல்ஏக்களின் ராஜினாமா கேலி கூத்தானது- சென்னை உயர்நீதிமன்றம்

எம்எல்ஏக்களின் ராஜினாமா கேலி கூத்தானது- சென்னை உயர்நீதிமன்றம்

மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடையில்லை எனக்கூறி வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்தது. இரு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கியது. இன்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைகிறது. இந்த 2 தொகுதிகளிலும் அதிமுக சார்பில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆகி ராஜினாமா செய்தவர்கள் தற்போது தவெக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். தேர்தல் முடிவுகள் வெளியான…

Read More
நிர்மலா தேவி வழக்கு : அவகாசம் கேட்ட அரசு தரப்பு, ஒத்திவைத்த நீதிமன்றம்

நிர்மலா தேவி வழக்கு : அவகாசம் கேட்ட அரசு தரப்பு, ஒத்திவைத்த நீதிமன்றம்

விருதுநகர் மாவட்ட விரைவு நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைக்க கோரி சிறையில் இருக்கும் பேராசிரியை நிர்மலா தேவி தொடர்ந்த வழக்கின் விசாரணையின் போது,அரசுத் தரப்பில், மூத்த வழக்கறிஞர் ஆஜராக கால அவகாசம் கோரிய நிலையில், வழக்கை செப்டம்பர் 21ம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை உயர்நீதிமன்றஅமர்வு உத்தரவிட்டது. மதுரை பெண்கள் சிறப்பு சிறையில் தண்டனை கைதியாக உள்ள கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில், மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்” மாணவிகளை தவறான பாதைக்கு…

Read More