பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து முரண்பாடு காரணமாக மோதல் போக்கு நிலவி வந்தது.
இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் மீண்டும் இணைந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஜூலைவில் நடைபெற்ற தனது 88 வது பிறந்தநாள் விழாவில் பேசிய ராமதாஸ், உங்களுக்கு நல்ல செய்தியை சொல்கின்றேன் இன்று முதல் அரசியலில் இருந்து விலகுகிறேன் என தெரிவித்தார்.
இந்த நிலையில் தற்போது தைலாபுரம் இல்ல நுழைவாயில் கதவு முன்பு அரசியல் துறவறம் என்ற தலைப்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில் தினசரி காலை 10 மணி முதல் முற்பகல் 12 மணி வரை ராமதாசை சந்திக்கலாம்.
மேலும் அரசியல் துறவறம் மேற்கொண்டுள்ளதால் ராமதாசை சந்திக்க வரும் பார்வையாளர்கள் தயவுசெய்து அரசியல் பேச வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
