Headlines
7 ரூபாய் டிக்கெட்டுக்கு 10 ரூபாய் வசூல் : அடாவடி நடத்துனரை தட்டிக்கேட்ட பெண்

7 ரூபாய் டிக்கெட்டுக்கு 10 ரூபாய் வசூல் : அடாவடி நடத்துனரை தட்டிக்கேட்ட பெண்

Lகோவையில் 7 ரூபாய் டிக்கெட்டிற்கு 10 ரூபாய் வசூலித்து விட்டு, “இஷ்டம் இருந்தால் ஏறு, இல்லையென்றால் இறங்கு” என அடாவடியாகப் பேசிய தனியார் பேருந்து நடத்துநரை, பெண் ஒருவர் நடுரோட்டில் பேருந்தை மறித்து கேள்வி கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை, காந்திபுரத்தில் இருந்து உக்கடம் பேருந்து நிலையத்திற்கு தினமும் ஏராளமான அரசு மற்றும் தனியார் நகரப் பேருந்துகள் இயங்கி வருகின்றன. ​இந்நிலையில், உக்கடத்தில் இருந்து அண்ணா சிலை பேருந்து நிறுத்தத்திற்குச் செல்வதற்காகப் பெண்…

Read More
ஊருக்குள் புகுந்தகாட்டுயானை : வெளியான சிசிடிவி காட்சிகள்

ஊருக்குள் புகுந்தகாட்டுயானை : வெளியான சிசிடிவி காட்சிகள்

கோவையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. குறிப்பாக காட்டு யானைகள் மலை மற்றும் வனப் பகுதிகளில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி செல்கின்றன. ஊருக்குள்ள உள்ள கடைகள் மற்றும் வீடுகளையும் சேதப்படுத்தும் நிகழ்வுகளும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை கணுவாய் சோமையம்பாளையம் சுற்று பகுதியில் சுற்றி திரிந்துள்ளது. அப்பொழுது அங்கிருந்த ஒரு இருசக்கர வாகனத்தை…

Read More
நேபாளத்திலிருந்து கோவை வந்த 28 பேர் : கண்ணீருடன் வரவேற்ற குடும்பத்தினர்

நேபாளத்திலிருந்து கோவை வந்த 28 பேர் : கண்ணீருடன் வரவேற்ற குடும்பத்தினர்

கைலாய யாத்திரைக்காக சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 28 பேர் இன்று கோவை விமான நிலையம் வந்தடைந்தனர். நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ள பாதிப்பில் இருந்து தப்பித்து, பாதுகாப்பாக தமிழகம் திரும்பிய அவர்களை குடும்பத்தினர் மலர் கொடுத்து, கண்ணீர் மல்க வரவேற்றனர். கைலாய யாத்திரைக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்ற 28 பேர், நேபாளம் வழியாக தங்களது பயணத்தை மேற்கொண்டிருந்தனர். அப்போது நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. வெள்ள பாதிப்பு ஏற்படுவதற்கு…

Read More
பானைக்குள் சிக்கிய சிறுவன் : போரடிய மீட்ட தீயணைப்பு துறை

பானைக்குள் சிக்கிய சிறுவன் : போரடிய மீட்ட தீயணைப்பு துறை

ஆண்பாவம் திரைப்படத்தில் பித்தளைப் பானைக்குள் நடிகர் தவக்களையின் தலை சிக்கிக் கொள்ளும் காட்சியும், அதனை மீட்க போராடும் காட்சி நகைச்சுவைக்காக எடுக்கப்பட்டது. ஆனால் அது. யதார்த்தத்தில் கொடுமையானதுஇதுபோன்ற சம்பவம் நேற்று சிவகாசியில் நடந்தது. சிவகாசி சசிநகரில் வசித்து வரும் தம்பதியினர் தங்களது 4-வயது மகனின் பிஞ்சுக் கால்கள் இரண்டும் பித்தளைப் பானைக்குள் சிக்கிக் கொண்டு வெளியே எடுக்க முடியாத நிலையில் தவித்தபடி இருசக்கர வாகனத்தில் சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு பதைபதைப்புடன் வந்துள்ளனர். பெற்றோரின் நிலையறிந்த தீயணைப்பு வீரர்கள்…

Read More
ரவுண்டானா தடுப்பு சுவற்றில் மோதி சிக்கிய லாரி : போக்குவரத்து பாதிப்பு

ரவுண்டானா தடுப்பு சுவற்றில் மோதி சிக்கிய லாரி : போக்குவரத்து பாதிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானா தடுப்பு சுவரில் லாரி ஒன்று மோதி சிக்கிக் கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்ததாக கூறப்படும் லாரி, சோளிங்கர் பேருந்து நிலையம் அருகே வந்தபோது ரவுண்டானா தடுப்பு சுவரில் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் லாரி தடுப்பு சுவரில் சிக்கிக் கொண்டது. இதையடுத்து அப்பகுதியில் திரண்ட பொதுமக்கள், ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் நீண்ட நேரம் போராடி லாரியை பத்திரமாக மீட்டனர். தகவல்…

Read More
ராகுல் மீது வழக்கு : பிரதமர் உருவப்படத்தை எரித்து காங்கிரசார் போராட்டம்

ராகுல் மீது வழக்கு : பிரதமர் உருவப்படத்தை எரித்து காங்கிரசார் போராட்டம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது பாஜக, ஆர்எஸ்எஸ் தூண்டுதலின் பேரில் உத்தரகாண்ட் மாநில அரசு பொய் வழக்கு பதிவு செய்த்தாக கூறியும்,அதை கண்டித்தும், பிரதமர் நரேந்திர மோடியின் உருவ படத்தை எரித்தும் ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர் ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது பாஜக,ஆர்எஸ்எஸ் அமைப்பு தூண்டுதலின் பேரில் உத்தரகாண்ட மாநில அரசு பொய் வழக்கு பதிவு செய்ததாக கூறி, அதை கண்டித்து மாவட்ட தலைவர்…

Read More
நர்சிங் மாணவிக்கு அரிவாள் வெட்டு : முன்னாள் கணவருக்கு மாவுகட்டு

நர்சிங் மாணவிக்கு அரிவாள் வெட்டு : முன்னாள் கணவருக்கு மாவுகட்டு

காட்பாடி அருகே விவாகரத்து பெற்ற நர்சிங் கல்லூரி மாணவியை அரிவாளால் சாராமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிய முன்னாள் கணவரை போலீசார் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பின் கைது செய்தனர். போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்று தவறி விழுந்த அவரின் காலில் முறிவு ஏற்பட்டதால் சிகிச்சைக்கு வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கிறிஸ்டியான் பேட்டை அந்தோணியார் தெருவைச் சேர்ந்தவர் மறைந்த தயாளன். இவரது மனைவி ஜோஸ்வின் தனியார் பல்கலைக்கழகத்தில் பாதுகாவலராகப் பணியாற்றி வருகிறார். இவர்களது…

Read More
ஆனைமலை புலிகள் காப்பகம் அருகே கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் : அதிகாரிகள் விசாரணை

ஆனைமலை புலிகள் காப்பகம் அருகே கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் : அதிகாரிகள் விசாரணை

பொள்ளாச்சி அருகே நீர்வழிப் பாதை மற்றும் யானைகள் வழித்தடத்தில் கொட்டப்பட்டிருந்த மருத்துவ கழிவுகளை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பரிசோதனைக்கு எடுத்து சென்றனர். பொள்ளாச்சி அடுத்த புளியங்கண்டி ஆனைமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி இருப்பதால் யானை, மான் போன்ற வனவிலங்கு அடிக்கடி வந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி வருவது வழக்கம். இந்த நீர்வழிப் பாதை மற்றும் யானைகள் வழித்தடத்தில் மர்ம நபர்கள் மருத்துவ கழிவுகளைக் கொட்டி சென்றுள்ளனர். இந்தக் கழிவுகளில் ஆயிரக்கணக்கான சிரஞ்ச் ஊசி மருந்து…

Read More
புகார்களை அடுக்கிய கவுன்சிலர் : மிக்சர் சாப்பிட்ட அதிகாரி

புகார்களை அடுக்கிய கவுன்சிலர் : மிக்சர் சாப்பிட்ட அதிகாரி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியில் நேற்று சாதாரண, மற்றும் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இதில் சாதாரண கூட்டத்தில் புதிய பேருந்து நிலையம் இருசக்ர வாகன தினசரி கட்டண வசூல் ஒப்பந்தமும், அவசரக் கூடத்தில் மூன்று சாலை பணிகளின் ஒப்பந்தகளை நிறுத்தி வைக்க கோரி அனைத்து கவுன்சிலர்களும் கூட்டம் தொடங்கும் முன்பு பொறுப்பு மேயர் மற்றும் அதிகாரிகளிடத்தில் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மாமன்ற கவுன்சிலர் ஒருவர் குறைகளை கூறிக்கொண்டு இருக்கும்போது உதவி பொறியாளர் ஒருவர் மிச்சர் சாப்பிட்டபடி அமர்ந்திருந்தார்….

Read More
கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி ஓய்வு : கேரள முதல்வர் வருத்தம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி ஓய்வு : கேரள முதல்வர் வருத்தம்

அர்ஜென்டினா அணி கேப்டனும், சம காலத்தின் அதி சிறந்த கால்பந்து வீரருமான மெஸ்ஸி சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இந்த அறிவிப்பு உலக அளவில் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. மெஸ்ஸிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ள கேரளாவில் இந்த செய்தி கால்பந்து ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டினா அணி மீதான அபரிதமான அன்பு ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டுள்ளது. கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனும் மெஸ்ஸி மற்றும்…

Read More