Headlines

ஆனைமலை புலிகள் காப்பகம் அருகே கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் : அதிகாரிகள் விசாரணை

ஆனைமலை புலிகள் காப்பகம் அருகே கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் : அதிகாரிகள் விசாரணை

பொள்ளாச்சி அருகே நீர்வழிப் பாதை மற்றும் யானைகள் வழித்தடத்தில் கொட்டப்பட்டிருந்த மருத்துவ கழிவுகளை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பரிசோதனைக்கு எடுத்து சென்றனர்.

பொள்ளாச்சி அடுத்த புளியங்கண்டி ஆனைமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி இருப்பதால் யானை, மான் போன்ற வனவிலங்கு அடிக்கடி வந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி வருவது வழக்கம்.

இந்த நீர்வழிப் பாதை மற்றும் யானைகள் வழித்தடத்தில் மர்ம நபர்கள் மருத்துவ கழிவுகளைக் கொட்டி சென்றுள்ளனர்.

இந்தக் கழிவுகளில் ஆயிரக்கணக்கான சிரஞ்ச் ஊசி மருந்து பாட்டில்கள் அதிக அளவில் இருந்தது.

இந்த மருத்துவ கழிவுகளால் இவ் வழியாக உணவு தேடி மற்றும் தண்ணீர் குடிக்க வரும் வனவிலங்குகள் காலில் குத்தி உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் நிலவியது.

இதையடுத்து தகவலறிந்து
சம்பவ இடத்துக்கு வந்த மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் கோட்டூர் பேரூராட்சி ஊழியர்கள் அப்பகுதியில் கொட்டப்பட்டு இருந்த அனைத்து ஊசிகளையும் மருத்துவ பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.

மருத்துவ கழிவுகளை கொட்டிய நபர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *