Headlines

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி ஓய்வு : கேரள முதல்வர் வருத்தம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி ஓய்வு : கேரள முதல்வர் வருத்தம்

அர்ஜென்டினா அணி கேப்டனும், சம காலத்தின் அதி சிறந்த கால்பந்து வீரருமான மெஸ்ஸி சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இந்த அறிவிப்பு உலக அளவில் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது.

மெஸ்ஸிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ள கேரளாவில் இந்த செய்தி கால்பந்து ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டினா அணி மீதான அபரிதமான அன்பு ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டுள்ளது.

கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனும் மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டினா அணியின் கேரளா வருகை தொடர்பாக கடந்த காலங்களில் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்திருந்தார்.

மெஸ்ஸி மீதான கேரள மக்களின் கால்பந்து ஆர்வமும், மாநில அரசின் முந்தைய முயற்சிகளும் அப்போது தேசிய அளவில் கவனம் பெற்றிருந்தன.

தற்போதையை
கேரளாவின் முதல்வர் வி டி சதீசன் தனது எக்ஸ் தளத்தில் “கோட்” என எழுதி, அதனருகிலேயே நொறுங்கிய இதயத்தை பதிவிட்டுள்ளார்.

கேரள மக்களின் வருத்ததை முதல்வர் பகிர்ந்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *