Headlines
அச்சுறுத்தும் மர்ம விலங்கு : பீதியில் பொதுமக்கள்

அச்சுறுத்தும் மர்ம விலங்கு : பீதியில் பொதுமக்கள்

​கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள தாசனூர் கிராமத்தில் கடந்த ஒரு வார காலமாக நள்ளிரவில் உலா வரும் மர்ம விலங்கு ஒன்று பூனைகள் மற்றும் கோழிகளைக் கடித்துக் கொன்று வருவதால் அப்பகுதி பொதுமக்கள் கடுமையான அச்சத்தில் உறைந்து உள்ளனர். மேட்டுப்பாளையம் அடுத்த தாசனூர் பெருமாள் கோவில் வீதியின் பின்புறம் உள்ள வீடொன்றில் வளர்க்கப்பட்டு வந்த கோழிகளை, கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வேளையில் வீட்டிற்குள் புகுந்த மர்ம விலங்கு ஒன்று கடித்துக் கொன்றது. ​இதன் தொடர்ச்சியாக,…

Read More
பாவம் பார்த்த பெண்ணுக்கு நடந்த கொடூரம் : தாம்பரம் அருகே பரபரப்பு

பாவம் பார்த்த பெண்ணுக்கு நடந்த கொடூரம் : தாம்பரம் அருகே பரபரப்பு

தாம்பரம் அருகே மயக்கம் வருவதாக கூறியதால் தண்ணீர் கொண்டுவந்த பெண்ணின் நகையை பறிக்க முயன்று, பெண்ணின் கழுத்தை அறுத்ததுடன் , தன்னுடைய கழுத்தையும் கல்லூரி மாணவர் அறுத்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம், சோமசுந்தரம் தெருவை சேர்ந்தவர் கல்லூரி மாணவர் சிவா (19) பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார், இன்று பிற்பகல் தனது வீட்டின் எதிரே உள்ள குடியிருப்பு பகுதிக்கு சென்ற சிவா…

Read More
கோவை அருகே அரியவகை எறும்பு திண்ணி மீட்பு

கோவை அருகே அரியவகை எறும்பு திண்ணி மீட்பு

​ கோவை, மருதமலை வனப்பகுதியை அடுத்து உள்ள கஸ்தூரி நாயக்கன்பாளையம் கிராமத்திற்குள் வழி தவறி வந்த எறும்புத் திண்ணியை எந்தவொரு காயமுமின்றி உயிருடன் மீட்டனர். கோவை, மருதமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட கஸ்தூரி நாயக்கன்பாளையம் குடியிருப்புப் பகுதிக்குள் அடர்ந்த வனப்பகுதியில் இருந்து எறும்புத்திண்ணி ஒன்று உணவைத் தேடி வழிதவறி வந்து உள்ளது. ​அரிதான இந்த உயிரினம் குடியிருப்புப் பாதையில் உலா வருவதைக் கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக இதுகுறித்து வன உயிரினப் பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழுவிற்கு தகவல்…

Read More
கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி: பெண் ஊராட்சி மன்ற தலைவரால் பரபரப்பு

கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி: பெண் ஊராட்சி மன்ற தலைவரால் பரபரப்பு

கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி: பெண் ஊராட்சி மன்ற தலைவரால் பரபரப்பு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முகையூர் அருகே உள்ள கொடுங்கால் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஊராட்சி மன்ற தலைவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தன்னை ஊராட்சி மன்ற தலைவராக முறையாக பணியாற்ற விடாமல் சிலர் தொடர்ந்து தடுத்து வருவதாகவும், தான் பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் என்பதால் தன்னை அவமானப்படுத்தி பாகுபாடு காட்டுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்….

Read More
காங்கிரஸ் கட்சியினர் யாரிடமும் நம்பிக்கையாக இருக்க மாட்டார்கள் : நயினார் நாகேந்திரன்

காங்கிரஸ் கட்சியினர் யாரிடமும் நம்பிக்கையாக இருக்க மாட்டார்கள் : நயினார் நாகேந்திரன்

காங்கிரஸ் கட்சியினர் யாரிடமும் நம்பிக்கையாக இருக்க மாட்டார்கள். தி.மு.க.வுடன் 15 ஆண்டுகள் நம்பிக்கையாக இருந்தவர்கள், தற்போது ஒரு நிமிடத்தில் ஓடி வந்துவிட்டார்கள். ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் இல்லை என்பதும், காங்கிரசால் ஆட்சிக்கு வர முடியாது என்பதும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகளுக்கு தெரியும் என நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். நெல்லையில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகையில், கடந்த காலங்களில் சட்டமன்றத்தில்…

Read More
விநாயகர் கோவிலுக்கு நிலம் கொடுத்த இஸ்லாமியர்கள் : நெகிழ்ச்சியில் ஆழ்ந்த இந்துக்கள்

விநாயகர் கோவிலுக்கு நிலம் கொடுத்த இஸ்லாமியர்கள் : நெகிழ்ச்சியில் ஆழ்ந்த இந்துக்கள்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே காட்டுநாவல் ஊராட்சி, துளுக்கம்பட்டி கிராமத்தில் இந்து மக்கள் விநாயகர் கோவில் கட்டுவதற்கு அதே கிராமத்தில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் தங்களுக்கு சொந்தமான 10 சென்ட் நிலத்தை தானமாக கொடுத்துள்ளனர். இதுகுறித்து நிலத்தை தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் கூறுகையில்,பல ஆண்டு காலமாக கோவில் கட்டப்படாமல் இருந்து வந்த நிலையில் அது தங்களுக்கு மிகுந்த வருத்தமாக இருந்து வந்தது. இந்து மக்கள் கோவில் இல்லாததால் சாமி கும்பிட முடியாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் இந்து…

Read More
துரத்தி கடித்த நாய்கள் : 20 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை

துரத்தி கடித்த நாய்கள் : 20 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட சாலைகளில் வெறிநாய்கள் அதிக அளவில் சுற்றி திரிவதோடு சாலையில் நடந்து செல்லும் பள்ளி மாணவர்கள் சிறுவர்கள் பொதுமக்கள் ஆகியோரை வெறிநாய்கள் துரத்திச் சென்று கடிப்பது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில் கடையநல்லூர் பகுதியில் சாலையில் நடந்து சென்ற சுமார் ஐந்திற்கு மேற்பட்டோரை நேற்று வெறிநாய் ஒன்று துரத்தி சென்று கடித்து குதறியுள்ளது. இதில் காயமடைந்தவர்கள் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று மேலக்கடையநல்லூர், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில்…

Read More
ஆபரேஷன் டூபான்: போதை கும்பலை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார் - ரூ.10 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்,3 பேர் கைது

ஆபரேஷன் டூபான்: போதை கும்பலை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார் – ரூ.10 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்,3 பேர் கைது

தமிழக எல்லைப் பகுதியான கோவையில் முகாமிட்டு, காரின் கதவுகளுக்குள் ரகசிய அறை அமைத்து கடத்த முயன்ற சுமார் ரூ.10 கோடி சர்வதேச சந்தை மதிப்புடைய 12.80 கிலோ ‘எம்.டி.எம்.ஏ.’ வீரிய ரக போதைப்பொருளைக் கேரள மாநில தனிப்படை போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாகக் கேரளாவைச் சேர்ந்த முக்கிய கடத்தல் புள்ளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கேரள காவல் துறையின் வரலாற்றிலேயே ஒரே ஒரு சோதனையில் இவ்வளவு பெரிய அளவில் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள்…

Read More
ஒட ஓட விரட்டி கொ** செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் : புதுவையில் பயங்கரம்

ஒட ஓட விரட்டி கொ** செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் : புதுவையில் பயங்கரம்

புதுச்சேரி,கோவிந்த சாலை பகுதியை சேர்ந்தவர் ஆனந்த். ஆட்டோ ஓட்டுனரான இவர் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் இவருக்கு திருமணமாகி சரோஜினி (28) என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு 12 மணியளவில் ஆனந்த் அவரது வீட்டின் வெளியே நின்றிருந்தபோது,3 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென ஆனந்தனை சரமாரியாக அடித்துள்ளனர். உடனே அவர்களிடமிருந்து ஆனந்தன் தப்பி ஓடியுள்ளார். ஆனால் மர்ம கும்பல் ஆனந்தனை பயங்கர ஆயுதங்களுடன் விடாமல்…

Read More
கொளத்தூர் தேர்தல் வழக்கு : மு.க.ஸ்டாலின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

கொளத்தூர் தேர்தல் வழக்கு : மு.க.ஸ்டாலின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி. எஸ். பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக் கோரி, திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் விஎஸ் பாபு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது இடத்தை பிடித்த முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அளித்த விண்ணப்பத்தை ஏற்று,…

Read More