Headlines

புகார்களை அடுக்கிய கவுன்சிலர் : மிக்சர் சாப்பிட்ட அதிகாரி

புகார்களை அடுக்கிய கவுன்சிலர் : மிக்சர் சாப்பிட்ட அதிகாரி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியில் நேற்று சாதாரண, மற்றும் அவசரக் கூட்டம் நடைபெற்றது.

இதில் சாதாரண கூட்டத்தில் புதிய பேருந்து நிலையம் இருசக்ர வாகன தினசரி கட்டண வசூல் ஒப்பந்தமும், அவசரக் கூடத்தில் மூன்று சாலை பணிகளின் ஒப்பந்தகளை நிறுத்தி வைக்க கோரி அனைத்து கவுன்சிலர்களும் கூட்டம் தொடங்கும் முன்பு பொறுப்பு மேயர் மற்றும் அதிகாரிகளிடத்தில் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

மாமன்ற கவுன்சிலர் ஒருவர் குறைகளை கூறிக்கொண்டு இருக்கும்போது உதவி பொறியாளர் ஒருவர் மிச்சர் சாப்பிட்டபடி அமர்ந்திருந்தார்.

இதைப்பார்த்து டென்ஷனான கவுன்சிலர், மேயரிடம் இதுபற்றி் முறையிட்ட வீடியோ வெளியாகி் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *