Headlines
விவசாயி வீட்டிற்கு விசிட் : மகிழ்ச்சியில் ஆழ்த்திய முதல்வர் விஜய்

விவசாயி வீட்டிற்கு விசிட் : மகிழ்ச்சியில் ஆழ்த்திய முதல்வர் விஜய்

மேட்டூர் சின்னக்கவூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமசாமியின் இல்லத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் சென்று சந்தித்தார். மேட்டூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக சின்னக்கவூர் கிராமத்திற்கு சென்ற முதலமைச்சர், விவசாயி ராமசாமியின் வீட்டிற்குச் சென்று அவரையும், அவரது குடும்பத்தினரையும் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, அங்கிருந்த வயதான மூதாட்டி ஒருவரை சந்தித்த முதலமைச்சர், தனது கண்ணாடியை அவருக்கு அணிவித்து மகிழ்ந்தார். முதலமைச்சரின் இந்த அன்பான செயலால் நெகிழ்ந்த மூதாட்டி, அவரை கட்டியணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த…

Read More
போராட்ட அறிவிப்பு : வீட்டு காவலில் விவசாய சங்க நிர்வாகி

போராட்ட அறிவிப்பு : வீட்டு காவலில் விவசாய சங்க நிர்வாகி

சென்னையில் இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த மாநில செயலாளர் மகேந்திரன் சுவாமிமலை அருகே இன்னம்பூர் கிராமத்தில் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார் . விவசாயிகளின் பயிர் கடன்கள் தள்ளுபடியில் உள்ள குளறுபடிகளை கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாய அமைப்புகள் சென்னை ராஜரத்தினம் திடலில் இன்று முதல் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு இருந்தனர் . விவசாயிகளின் இந்தப்…

Read More
கோவில் வழித்தடம் ஆக்கிரமிப்பு : காவல் ஆணையரிடம் புகார்

கோவில் வழித்தடம் ஆக்கிரமிப்பு : காவல் ஆணையரிடம் புகார்

திருப்பூர் மாவட்டம் தொட்டிய பாளையம் கிராமம், கஞ்சம் பாளையம் பகுதியில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கு 55 சென்ட் நிலம் உள்ளதாகவும், இப்பகுதியில் கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னோர்களின் நடு கற்களை வைத்து அருள்மிகு மாலை கோவில் வழிபாடு இச்சமுதாய மக்களால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வழிபாடு நடைபெறும் இடத்தின் அருகில் உள்ள நில உரிமையாளர் ஒருவர் கோவிலுக்கு செல்லும் வழியை மறித்து ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு நடுகற்களை அப்புறப்படுத்தி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறத. இது…

Read More
சிஎஸ்கே வலுவான கம்பேக் கொடுக்கும் : ருதுராஜ் கெய்க்வாட்

சிஎஸ்கே வலுவான கம்பேக் கொடுக்கும் : ருதுராஜ் கெய்க்வாட்

வரும் ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வலுவான கம்பேக் கொடுக்கும் என சி எஸ்.கே.கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கோவை எஸ்.எஸ்.வி.எம் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், மாணவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ருதுராஜ் கெய்க்வாட், சிஎஸ்கே கேப்டனாக இருப்பது தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பயணம் என தெரிவித்தார். எம்.எஸ்.தோனிக்குப் பிறகு கேப்டன் பொறுப்பை ஏற்றிருப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும், அந்த அழுத்தத்தை ஏற்றுக்கொண்டு பொறுப்பை ரசித்து செய்து…

Read More
FQL நிதி நிறுவன மோசடி வழக்கு: சிவகங்கையில் 2 பேர் கைது

FQL நிதி நிறுவன மோசடி வழக்கு: சிவகங்கையில் 2 பேர் கைது

FQL நிதி நிறுவன மோசடியில் சிவகங்கை மாவட்ட ஏஜென்டுகள் இருவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மதுரை மாவட்டம் மேலூரை தலைமையாக கொண்ட FQL என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்த நிலையில், அந்த நிறுவனத்தின் மொபைல் ஆப் மூலம் 1 லட்சம் செலுத்தினால் 45 நாட்களில் இரட்டிப்பு லாபம் எனக்கூறி ரூ.1,000 கோடி அளவிற்கு மோசடி செய்துள்ளனர். இதனை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக காவல் காவல்நிலையங்களிலும், பொருளாதார குற்றப்பிரிவு காவல்…

Read More
“தவெக - காங்கிரஸ் கூட்டணிக்குள் நரித்தந்திரம் செய்யுறாங்க” : மாணிக்கம் தாகூர்

“தவெக – காங்கிரஸ் கூட்டணிக்குள் நரித்தந்திரம் செய்யுறாங்க” : மாணிக்கம் தாகூர்

சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம் நெல் கட்டும் செவலில் உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர், தமிழக சட்டமன்றத்தில் எம்எல்ஏக்கள் மக்கள் பிரச்சினைகளை பேசவில்லை என்ற விமர்சனம் குறித்து பதிலளித்தார். தமிழக சட்டமன்றத்தை நேரலை செய்வது பாராட்டுக்குரிய விஷயம் என்றும், இதற்கு மிகப்பெரிய தைரியமும்,…

Read More
மேட்டூர் அணை திறப்பு : தற்குறிகளின் ரீல்ஸ்க்கு மட்டுமே உதவும் - டிடிவி தினகரன்

மேட்டூர் அணை திறப்பு : தற்குறிகளின் ரீல்ஸ்க்கு மட்டுமே உதவும் – டிடிவி தினகரன்

தென்காசி மாவட்டம் நெற்கட்டும்செவலில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு மற்றும் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார். மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்க முடியாத அளவுக்கு கடுமையான வறட்சி நிலவுவதாகக் கூறிய அவர், 25 முதல் 30 நாட்கள் வரை தண்ணீர் திறந்தால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும் என்பது விவசாய சங்கங்களின் கருத்தாக உள்ளது என்றார். விவசாயிகள்,…

Read More
மேகதாட்டு அணைக்கு எதிர்ப்பு : செப்.20 ல் பிரச்சார பயணம் துவக்கம்

மேகதாட்டு அணைக்கு எதிர்ப்பு : செப்.20 ல் பிரச்சார பயணம் துவக்கம்

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் அவசர கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு புதுச்சேரி மாநில தலைவர் பொன் ராஜேந்திரன் தலைமை வகித்தார். பங்கேற்று பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் பொதுச் செயலாளர் பி. ஆர் பாண்டியன் தெரிவித்ததாவது, மேட்டூர் அணையில் முதலமைச்சர் தண்ணீரை திறந்து வைத்துள்ளார். இதனை மாவட்ட அளவில் வருவாய்த்துறைநீர் பாசனத்துறை வேளாண்மை துறை காவல் துறை கொண்ட கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தி குளம் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளை நிரப்பிட வேண்டும்….

Read More
மென்பொருள் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை : ஓஎம்ஆர் சாலையில் பரபரப்பு

மென்பொருள் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை : ஓஎம்ஆர் சாலையில் பரபரப்பு

சென்னையில் உள்ள இரண்டு மென்பொருள் நிறுவனங்களில் சுமார் 50 வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை பெருங்குடி தரமணி இணைக்கும் பிரதான சாலையான எம்ஜிஆர் சாலையில் உள்ள TYCHE டவர் வளாகத்தில் செயல்பட்டு வரும் DENTSU மென்பொருள் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கந்தன்சாவடியில் உள்ள மென் பொருள் நிறுவன அலுவலகத்திலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல் அதே சாலையில் உள்ள குளோபல் இன்போசிட்டி பார்க்…

Read More
அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்க கோரி கரூரில் சாலை மறியல்

அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்க கோரி கரூரில் சாலை மறியல்

அமராவதி ஆற்றில் 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் மற்றும் அனைத்து கட்சியினர் மாவட்ட எல்லையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் மாவட்டம் அமராவதி ஆற்றில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுவதால், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள்…

Read More