ஆண்பாவம் திரைப்படத்தில் பித்தளைப் பானைக்குள் நடிகர் தவக்களையின் தலை சிக்கிக் கொள்ளும் காட்சியும், அதனை மீட்க போராடும் காட்சி நகைச்சுவைக்காக எடுக்கப்பட்டது.
ஆனால் அது. யதார்த்தத்தில் கொடுமையானது
இதுபோன்ற சம்பவம் நேற்று சிவகாசியில் நடந்தது.
சிவகாசி சசிநகரில் வசித்து வரும் தம்பதியினர் தங்களது 4-வயது மகனின் பிஞ்சுக் கால்கள் இரண்டும் பித்தளைப் பானைக்குள் சிக்கிக் கொண்டு வெளியே எடுக்க முடியாத நிலையில் தவித்தபடி இருசக்கர வாகனத்தில் சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு பதைபதைப்புடன் வந்துள்ளனர்.
பெற்றோரின் நிலையறிந்த தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு பித்தளை பானைக்குள் சிக்கியிருந்த சிறுவனின் கால்களை லாவகமாக மீட்டனர்.
தீயணைப்புத் துறையினரின் துரித செயலுக்கு பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.
வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது பானையின் மீது ஏறி பானையினுள் அமர முயன்ற 4-வயது சிறுவனின் கால்கள் பித்தளைப் பானைக்குள் சிக்கி் துடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
