Headlines

ரவுண்டானா தடுப்பு சுவற்றில் மோதி சிக்கிய லாரி : போக்குவரத்து பாதிப்பு

ரவுண்டானா தடுப்பு சுவற்றில் மோதி சிக்கிய லாரி : போக்குவரத்து பாதிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானா தடுப்பு சுவரில் லாரி ஒன்று மோதி சிக்கிக் கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்ததாக கூறப்படும் லாரி, சோளிங்கர் பேருந்து நிலையம் அருகே வந்தபோது ரவுண்டானா தடுப்பு சுவரில் எதிர்பாராத விதமாக மோதியது.

இதில் லாரி தடுப்பு சுவரில் சிக்கிக் கொண்டது.

இதையடுத்து அப்பகுதியில் திரண்ட பொதுமக்கள், ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் நீண்ட நேரம் போராடி லாரியை பத்திரமாக மீட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த லாரி எங்கு புறப்பட்டு வந்தது, எங்கு செல்ல இருந்தது, விபத்துக்கான காரணம் என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர்.

லாரி தடுப்பு சுவரில் சிக்கியதால் சோளிங்கர் பேருந்து நிலையம் அருகே சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *