Headlines

துணை தாசில்தார்களுக்கு கூடுதல் அதிகாரம் : தமிழக அரசு அறிவிப்பு

துணை தாசில்தார்களுக்கு கூடுதல் அதிகாரம் : தமிழக அரசு அறிவிப்பு

தமிழக வருவாய்த் துறையில் நிர்வாக சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக முக்கியமான மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதுவரை தாசில்தாரின் கட்டுப்பாட்டில் இருந்த பல்வேறு வருவாய் சான்றிதழ்களை வழங்கும் அதிகாரம், தற்போது துணை தாசில்தார்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு ஆன்லைன் முறையில் வருவாய்த் துறை சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், தாசில்தார்களுக்கு அதிகளவில் பணிச்சுமை ஏற்பட்டு விண்ணப்பங்கள் முடிவடைவதில் தாமதம் ஏற்படுவதாக அரசுக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து, விண்ணப்பங்களை விரைவாக பரிசீலித்து சான்றிதழ்களை வழங்கும் வகையில், தலைமையிட துணை தாசில்தார் மற்றும் மண்டல துணை தாசில்தார்களுக்கு ஒப்புதல் வழங்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

துணை தாசில்தாருக்கு வழங்கப்பட்ட புதிய அதிகாரங்கள்:

  1. முதல் பட்டதாரி சான்றிதழ்
    (First Graduate Certificate)
  2. கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
    (Deserted Woman Certificate)
  3. விதவைச் சான்றிதழ்
    (Widow Certificate)
  4. திருமணமாகாதவர் சான்றிதழ்
    (Unmarried Certificate)
  5. இருப்பிடச் சான்றிதழ்
    (Residence Certificate)
  6. இருப்பிட நிருபணச் சான்றிதழ்
    (Nativity Certificate)
  7. ஆண் வாரிசு இல்லை என்பதற்கான சான்றிதழ்
    (No Male Child Certificate)
  8. கல்வி ஆவணங்கள் இழப்பு சான்றிதழ்
    (Loss of Educational Records / Certificates)
  9. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சான்றிதழ்
    (OBC Certificate – BC/MBC/DNC பிரிவினர்)
  10. இடைச்சாதித் திருமணச் சான்றிதழ்
    (Inter-caste Marriage Certificate)
  11. குடும்ப வருமானச் சான்றிதழ்
    (Income Certificate)
  12. ஜாதிச் சான்றிதழ்
    (Community Certificate – BC/MBC/DNC பிரிவினர் மட்டும்)
    மென்பொருளிலும் மாற்றம்

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தின் நிலையை எளிதில் அறிந்து கொள்ளும் வகையில், ஆன்லைன் மென்பொருளில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

இதன்படி,

  • விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளதா?
  • நிராகரிக்கப்பட்டதா?
  • திருப்பி அனுப்பப்பட்டதற்கான காரணம் என்ன?
    என்பது விண்ணப்பதாரர்களுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தெளிவாக தெரியும் வகையில் புதிய வசதி ஏற்படுத்தப்படும்.

மேலும், திருப்பி அனுப்பப்படும் விண்ணப்பங்களை தமிழகத்தில் உள்ள எந்த ஒரு இ-சேவை மையத்திலும் திருத்தம் செய்து மீண்டும் சமர்ப்பிக்கும் வசதியும் கொண்டு வரப்படுகிறது.
சில சான்றிதழ்களுக்கு பழைய நடைமுறை தொடரும்

பட்டியல் சாதியினர் (SC) சமூகச் சான்றிதழ்களுக்கு தாசில்தாரும்,
பட்டியல் பழங்குடியினர் (ST) சமூகச் சான்றிதழ்களுக்கு கோட்டாட்சியரும் (RDO) தொடர்ந்து இறுதி ஒப்புதல் அதிகாரிகளாக இருப்பார்கள்.

புதிய மாற்றத்தின் நோக்கம்

துணை தாசில்தார்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதன் மூலம்:

சான்றிதழ் வழங்கும் காலதாமதம் குறையும்

பொதுமக்களின் அலைச்சல் குறையும்

தாசில்தார்கள் நில விவகாரம், சட்டம்-ஒழுங்கு பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த முடியும்.

வருவாய்த் துறை சேவைகள் வேகமாக கிடைக்கும்.என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *