Headlines

622 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் : குளித்தலை போலீசார் அதிரடி

622 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் : குளித்தலை போலீசார் அதிரடி

கரூர் மாவட்டம் குளித்தலை டிஎஸ்பி உத்தரவின் பேரில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட விற்பனையை தடுக்கும் பொருட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குளித்தலை அருகே புகையிலைப் பொருட்களை ஓரிடத்தில் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து குளித்தலை அருகே உள்ள
இரணியமங்கலம் பஞ்சாயத்துக்குட்பட்ட வளையப்பட்டி பகுதியில் உள்ள சமத்துவபுரத்தில் உள்ள சதீஷ் என்பவரது வீட்டை ஆய்வு செய்ய சென்றுள்ளனர்.

போலீசாரை கண்டதும் சதீஷ் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.

அப்போது அவரது வீட்டில் சோதனை செய்தபோது அங்கிருந்த 11 சாக்குகளில்
பதுக்கி வைத்திருந்த
330 கிலோ குட்கா மற்றும்
52 கிலோ பான்பராக் ஆகியவற்றை கைப்பற்றினர்.
கைப்பற்றிய பொருட்களை குளித்தலை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

இதனை வைத்திருந்த சதீஸ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவலை தேடி வருகின்றனர்.
இதன் மதிப்பு ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.

அதுபோல
குளித்தலை அருகே உள்ள நச்சலூரில் திருச்சியில் டாக்டராக உள்ள ஒருவரது வீட்டை வாடகைக்கு எடுத்து
நச்சலூரில் மளிகை கடை நடத்தி வரும் மணி என்பவர் கடையில் 8 சாக்கு மூட்டைகளில் 240 கிலோ
புகையிலை போதைப் பொருட்களை நங்கவரம் இன்ஸ்பெக்டர்
மற்றும் போலீசார் கைப்பற்றினர்.

கைப்பற்றிய குட்கா பொருட்களை நங்கவரம் காவல் நிலையம் கொண்டு வந்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த நங்கவரம் போலீசார் தலைமறைவாக உள்ள மணி என்பவரை தேடி வருகின்றனர்.

குளித்தலை, நங்கவரம் காவல் நிலையப் பகுதிகளில் ஒரே நாளில் 622 கிலோ புகையிலை போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *