Headlines

மனைவியின் கள்ளக்காதல் : கணவன் தற்கொலை

மனைவியின் கள்ளக்காதல் : கணவன் தற்கொலை

ஆம்பூரில் மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தால் அவமானமடைந்த கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர் குப்பம் கோவில் தெருவை சேர்ந்த பாண்டியன் மகன் பாலச்சந்திரன் (26) இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் என்பவருக்கும் ஏழு வருடத்திற்கு முன் திருமணம் நடந்தது.

இத்தம்பதிக்கு மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

பாலச்சந்திரன் ஆம்பூர் பைபாஸ் சாலையில் ஒரு ஸ்டிக்கர் கடையில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் பாலச்சந்திரன் மனைவி, திருமணமான ஆட்டோ ஓட்டுநருடன் திருமணம் கடந்த உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதை அறிந்த பாலச்சந்திரன் மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் நேற்று இரவு ஆட்டோ ஓட்டுநலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரையும் தாக்கியுள்ளார் .

இதில் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் தாம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று காலை பாலச்சந்தர் தனது மாமியார் வீட்டில் சிமெண்ட் கூரையில் உள்ள கம்பியில் துப்பட்டாவல் தூக்கிட்ட நிலையில் இருந்துள்ளார். இதனை கண்ட அவரது மனைவி அவரை மீட்டு
ஆட்டோவில் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர் .

இது குறித்து தகவல் அறிந்த நகர காவல் துறை போலீசார் பாலச்சந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *