Headlines
ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் உதவியாளர் கைது : தனிப்படை போலீசார் அதிரடி

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் உதவியாளர் கைது : தனிப்படை போலீசார் அதிரடி

ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணியின் உல்லாசத்துக்கு அனைத்து உதவிகளையும் செய்து வந்த கணேசன் என்பவரை விபசார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் ராஜலட்சுமி தலைமையிலான தனிப்படை கைது செய்துள்ளனர். அவரின் செல்போனில் உள்ள வீரமணியின் உல்லாச வீடியோக்களின் உண்மை தன்மை குறித்து, தடயவியல் துறை அதிகாரிகள் உதவியுடன் ஆய்வு செய்து வருகின்றனர். பிரபல ஜெம் கிரானைட் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணி (84) சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது விபசார தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு…

Read More
லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.1.73 கோடி பறிமுதல்

லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.1.73 கோடி பறிமுதல்

தமிழ்நாட்டில் நேற்று (செப்.22) நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.1.73 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது 36 அரசு அலுவலகங்களில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.13 லட்சம் ரொக்கப்பணம், GPAY வாயிலாக பரிமாற்றம் செய்யப்பட்ட ரூ.1.59 கோடி கண்டுபிடிக்கப்பட்டது. 36 அரசு அலுவலகங்களில் மொத்தம் ரூ.1,73,48,666 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Read More
திருவத்திபுரம் நகராட்சியில் நள்ளிரவு வரை நீடித்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

திருவத்திபுரம் நகராட்சியில் நள்ளிரவு வரை நீடித்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஆற்காடு சாலையில் உள்ள திருவத்திபுரம் நகராட்சி அலுவலகம் இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் அருள் பிரசாத் தலைமையில் எட்டு பேர் கொண்ட குழுவினர் நகராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். நள்ளிரவு 12 மணி வரை இந்த சோதனை நகராட்சி நடைபெற்றது. சோதனையில் ஆணையரின் உதவியாளர் வங்கி கணக்கினை சோதனை செய்தபோது கணக்கில் வராத சுமார் ரூ.1.90 லட்ச ரூபாய்…

Read More
தவெக பிரச்சாரத்தில் பணம் பட்டுவாடா குற்றச்சாட்டு

தவெக பிரச்சாரத்தில் பணம் பட்டுவாடா குற்றச்சாட்டு

அச்சரப்பாக்கம் ஒன்றியத்தில்,தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கானபிரச்சாரம் நடைபெற்றது. த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல் வேட்பாளராக போட்டியிடும் நிலையில், அவரை ஆதரித்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், அச்சரப்பாக்கம் ஒன்றியத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தின்போது, பிரச்சாரத்திற்கு வந்த பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்பிரச்சாரத்தில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு தலா 500 ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக…

Read More
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விசாரணையை முடிக்க 3 மாத அவகாசம் - சிபிஐ உச்சநீதிமன்றத்தில் தகவல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விசாரணையை முடிக்க 3 மாத அவகாசம் – சிபிஐ உச்சநீதிமன்றத்தில் தகவல்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விசாரணையை முடிக்க 3 மாத அவகாசம் தேவை என்று வழக்கை விசாரித்து வரும் சிபிஐ முகமை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. வெளியே வந்தவர்களின் ஜாமினை ரத்து செய்து சிறையில் அடைக்க வேண்டும்.ஜாமினை ரத்து செய்தால்தான் சுதந்திரமான விசாரணையை உறுதி செய்ய முடியும் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டோர் சாட்சிகளை கலைக்க முயற்சிக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணை…

Read More
வங்கி ஊழியர் ஸ்டிரைக் மற்றும் விடுமுறை நாட்கள் : 5 நாட்கள் வங்கிப் பணி பாதிக்க வாய்ப்பு

வங்கி ஊழியர் ஸ்டிரைக் மற்றும் விடுமுறை நாட்கள் : 5 நாட்கள் வங்கிப் பணி பாதிக்க வாய்ப்பு

நாடு முழுவதும் செப்டம்பர் 28 முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை தேசிய வங்கிகளின் ஊழியர்கள், அலுவலர்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் 3 நாட்கள் வேலைநிறுத்தத்தை சேர்த்து 5 நாட்களுக்கு வங்கிப் பணிகள் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. வங்கி ஊழியர்களுக்கு சனி, ஞாயிறு விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. தேசிய வங்கிகளின் அலுவலர்கள், ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் 2.50 லட்சம் பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றனர். மொபைல்…

Read More
வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் 7 மணி நேரம் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் 7 மணி நேரம் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக நடத்திய அதிரடி சோதனையில், ஜிபே மூலம் பெறப்பட்ட கணக்கில் வராத ரூ.41 ஆயிரம் கண்டறியப்பட்டது. வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தின் பொதுப்பிரிவு, நிலப்பிரிவு உள்ளிட்ட துறைகளில் பிறப்பு, இறப்பு சான்றிதழ், கட்டிட அனுமதி, சொத்து வரி விதிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக பொதுமக்களிடம் லஞ்சம் பெறப்படுவதாக தொடர் புகார்கள் வந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராஜு தலைமையிலான அதிகாரிகள்,…

Read More
மதுரை கிரிக்கெட் வீராங்கனை கமலினிக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை : முதல்வர் விஜய் அறிவிப்பு

மதுரை கிரிக்கெட் வீராங்கனை கமலினிக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை : முதல்வர் விஜய் அறிவிப்பு

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டி, மகளிர் கிரிக்கெட் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள முதல்வர் விஜய், இந்திய அணியில் இடம்பெற்றுள்ள மதுரையைச் சேர்ந்த வீராங்கனை கமலினியின் சாதனையைப் பாராட்டி, தமிழக அரசின் சார்பில் ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்திருக்கிறார். தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் தனது எக்ஸ் தள பதிவில்,ஜப்பானில் நடைபெற்றுவரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் கிரிக்கெட் பிரிவில் தங்கப் பதக்கம்…

Read More
தாராபுரம் : வீடுகளில் ரூ.48 லட்சம் ரூபாய் பறிமுதல் - தேர்தல் அதிகாரிகள் விசாரணை

தாராபுரம் : வீடுகளில் ரூ.48 லட்சம் ரூபாய் பறிமுதல் – தேர்தல் அதிகாரிகள் விசாரணை

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வருகின்ற 6ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடப்பதை ஒட்டி, பல்வேறு கட்சியில் சார்பில் தீவிர பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் சார்பில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட எல்லைகளில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள் அதுமட்டுமின்றி, தாராபுரம் பகுதி முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தாராபுரம் அடுத்த மூலனூர் பகுதியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக…

Read More
தாராபுரம் இடைத்தேர்தல் : குடுகுடுப்பை அடித்து திமுகவினர் வாக்கு சேகரிப்பு

தாராபுரம் இடைத்தேர்தல் : குடுகுடுப்பை அடித்து திமுகவினர் வாக்கு சேகரிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் தாராபுரம் தொகுதியில் திமுக, அதிமுக, தவெக, நாதக இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய ஐந்து கட்சிகள் போட்டியிடுகின்றன. கடந்த சில நாட்களாக தவெக வேட்பாளரை விமர்சிக்கும் வகையில் திமுகவினர் சூட்கேஸ் வைத்து பெட்டி பாபா என வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று திமுக தலைமை கழக பேச்சாளர் கோவிந்தன், வஞ்சிபாளையம் வரப்பாளையம் ஆலம்பாளையம் வடுகபாளையம் ஆகிய…

Read More