திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஆற்காடு சாலையில் உள்ள திருவத்திபுரம் நகராட்சி அலுவலகம் இயங்கி வருகிறது.
இந்நிலையில் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் அருள் பிரசாத் தலைமையில் எட்டு பேர் கொண்ட குழுவினர் நகராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
நள்ளிரவு 12 மணி வரை இந்த சோதனை நகராட்சி நடைபெற்றது. சோதனையில் ஆணையரின் உதவியாளர் வங்கி கணக்கினை சோதனை செய்தபோது கணக்கில் வராத சுமார் ரூ.1.90 லட்ச ரூபாய் பிடிபட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணைக்காக எடுத்துச் சென்றனர்.
