Headlines
மனிதர்களை குறை சொல்வதைவிட, சிஸ்டத்தை சரிசெய்வதே முக்கியம் : அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

மனிதர்களை குறை சொல்வதைவிட, சிஸ்டத்தை சரிசெய்வதே முக்கியம் : அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

மனிதர்களை குறை சொல்வதைவிட, சிஸ்டத்தை சரிசெய்வதே முக்கியம். நிர்வாக அமைப்பு சரியாக இருந்தால் அதில் பணியாற்றும் ஒவ்வொருவரும் முறையாக செயல்பட முடியும் எனஅமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் மாநில அளவிலான நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை சார்ந்த அனைத்து பொறியாளர்களுக்கான ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் நடைபெற்றது இதில் பேசிய அவர்,தனக்கு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை பொறுப்பு வழங்கப்பட்டபோது, முதலமைச்சர் விஜய், இந்தத் துறைகளை சிறப்பாக…

Read More
தவெக நிர்வாகி தற்கொலை முயற்சி : அமைச்சர் மீது குற்றச்சாட்டு

தவெக நிர்வாகி தற்கொலை முயற்சி : அமைச்சர் மீது குற்றச்சாட்டு

தூத்துக்குடி புறநகர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளை மாற்றி, திமுகவில் இருந்து வந்தவர்களுக்குப் பதவி வழங்குவதாகக் கூறி, கட்சியின் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி புறநகர் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான மதன் ராஜா, கடந்த சில மாதங்களாக மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகளைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, தனது ஆதரவாளர்களுக்கும் உறவினர்களுக்கும் புதிய பொறுப்புகளை வழங்கி வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி…

Read More
40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

தமிழகம் முழுவதும் நகராட்சி நிர்வாகம், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட 40 அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஏற்கெனவே வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திய நிலையில், தற்போது 40 அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது.

Read More
அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை : பணம் பறிமுதல்

அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை : பணம் பறிமுதல்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அலுவலகத்தில் அனைத்து கதவுகளும் மூடப்பட்டு அலுவலகத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் அலுவலக ஊழியர்களிடமிருந்து கணக்கில் வராத 8000 ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நகராட்சி அலுவலகத்தில் இருந்த அலுவலர்களின் போன்பே, ஜிபே மூலம் செய்யப்பட்டுள்ள பரிவர்த்தனை…

Read More
என் உயிர் போனால் தான், மக்களை வெளியேற்ற முடியும் : திமுக எம்எல்ஏ ஆவேசம்

என் உயிர் போனால் தான், மக்களை வெளியேற்ற முடியும் : திமுக எம்எல்ஏ ஆவேசம்

தேனியில் வருசநாடு, மேகமலை உள்ளிட்ட மலை கிராம மக்களை வெளியேற்றுவதை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் என் உயிர் போனால் தான், இந்த மக்களை வெளியேற்ற முடியும் என திமுக எம்எல்ஏ மகாராஜன் ஆவேசமாக பேசினார். வருஷநாடு, மேகமலை உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட மலை கிராம மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூறி உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் வனத்துறையினரை கண்டித்து தமிழர் தேசம் கட்சி சார்பில் தேனி பங்களாமேடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம்…

Read More
ஆகாஷ் மரண வழக்கு : 6 காவலர்களுக்கும் நிபந்தனை ஜாமீன்

ஆகாஷ் மரண வழக்கு : 6 காவலர்களுக்கும் நிபந்தனை ஜாமீன்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த ஆகாஷ், கடந்த மார்ச் 8ஆம் தேதி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். ஆகாஷ் காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்ததாகக் கூறப்படும் இந்த வழக்கில், சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி 6 காவலர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். ஆகாஷ் உயிரிழந்தது முதல் 6 காவலர்களும் வெளியிலேயே இருந்து வந்த நிலையில், தற்போது முதன்முறையாக நீதிமன்றத்தில் ஆஜராகினர். சிவகங்கை மாவட்ட எஸ்.சி./எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், இதுவரை சிபிசிஐடி…

Read More
திருச்சி மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

திருச்சி மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

தமிழகம் முழுவதும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு சொந்தமான அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தொடர்புடைய அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் பெறப்படுவதாக, வரப்பெற்ற தொடர் புகார்களின் அடிப்படையில், தற்போது தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பாலக்கரை பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி மண்டலம் – 2…

Read More
"நள்ளிரவில் பற்றியெரிந்த பைக்குகள்!" வீட்டின் முன் நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு நேரந்த கதி

“நள்ளிரவில் பற்றியெரிந்த பைக்குகள்!” வீட்டின் முன் நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு நேரந்த கதி

கோவை, நல்லாம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்களுக்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட நல்லாம்பாளையம் பகுதியில் குடியிருந்து வரும் மெக்கானிக் ஒருவரின் வீட்டின் முன்பாக வழக்கம் போல் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு வேளையில் அங்கே வந்த மர்ம நபர்கள் சிலர், நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்களுக்குத் தீ வைத்து…

Read More
நெருங்கும் வடகிழக்கு பருவமழை : அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

நெருங்கும் வடகிழக்கு பருவமழை : அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் கால்வாய் தூர்வாரும் பணிகளை வரும் அக்டோபர் 2-வது வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுப்பணித் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உத்தரவிட்டார். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதைத் தடுப்பது மற்றும் மழைநீரை சீராக வெளியேற்றுவது தொடர்பாக பொதுப்பணித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு…

Read More
கொள்ளையனை மரத்தில் கட்டி வைத்த பொதுமக்கள் : மதுக்கரையில் பரபரப்பு

கொள்ளையனை மரத்தில் கட்டி வைத்த பொதுமக்கள் : மதுக்கரையில் பரபரப்பு

​கோவை மதுக்கரை அடுத்த நாச்சிபாளையம் பகுதியில் வீட்டிற்குள் புகுந்து கொள்ளை அடிக்க முயன்ற மர்ம நபரைப் பொதுமக்கள் கையும், களவுமாகப் பிடித்து, மரத்தில் கட்டி வைத்துப் போலீஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை, மதுக்கரை அருகே உள்ள நாச்சிபாளையம் கூலி மேடு பகுதியைச் சேர்ந்தவர் வீட்டின் பூட்டை உடைத்துக் கொண்டு மர்ம நபர் ஒருவர் திருடும் நோக்கில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து உள்ளார். ​வீட்டின் உள்ளே இருந்த பீரோவை உடைத்து நைஸாகப்…

Read More