Headlines
செந்நிற காவிரி நீர் : ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் தற்காலிக நிறுத்தம் - 2 மாவட்ட மக்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

செந்நிற காவிரி நீர் : ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் தற்காலிக நிறுத்தம் – 2 மாவட்ட மக்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் செந்நிறத்தில் தண்ணீர் வருகிறது. இதனால் நீரில் கலங்கல் தன்மை அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் தண்ணீர் சுத்திகரிப்பு பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடகா மாநிலம் குடகு, கபினி, கே.ஆர்.எஸ். அணை பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் செந்நிறத்தில்…

Read More
ஆதாரம் கொடுங்க : தவெக வேட்பாளரிடம் அதிமுக தொண்டர்கள் வாக்குவாதம்

ஆதாரம் கொடுங்க : தவெக வேட்பாளரிடம் அதிமுக தொண்டர்கள் வாக்குவாதம்

தாராபுரம் அடுத்த குண்டடம் மேற்கு ஒன்றிய பகுதிகளில் த. வெ. க. வேட்பாளர் சத்தியபாமா நேற்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.பெரியகுமாரபாளையம் பகுதியில் பிரச்சாரம் செய்த அவரிடம் அங்கிருந்த அதிமுக தொண்டர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 50கோடியை வாக்கிகொண்டு உங்களுக்காக கடுமையாக உழைத்த எங்களுக்கு துரோகம் செய்து விட்டு மீண்டும் ஓட்டுகேட்டு வந்துள்தை ஏற்கமுடியாது என்றும், தி. மு. க. வும் அ. தி. மு. க. வும் கூட்டு சேர்த்து ஆட்சி அமைக்க முயன்றதால் ராஜினாமா செய்தேன் என…

Read More
அன்னை தெரசா அறக்கட்டளை மோசடி : பாதிக்கப்பட்டவர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டம்

அன்னை தெரசா அறக்கட்டளை மோசடி : பாதிக்கப்பட்டவர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டம்

சேலம் அம்மாபேட்டை பகுதியில் இயங்கி வந்த அன்னை தெரசா அறக்கட்டளை நிதி மோசடி விவகாரத்தில் ஜாமீனில் வெளியே வந்த பாஸ்டர் செந்தில்குமாரை பொதுமக்கள் ஜெபக்கூடத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அன்னை தெரசா அறக்கட்டளையின் பெயரில் அதிக வட்டி மட்டும் இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி பொதுமக்களிடமிருந்து 3000 கோடி ரூபாய் வரை நிதி திரட்டி மோசடி செய்ததாக புகார் எழுந்தது.இந்த வழக்கில் தொடர்புடைய நபர்கள் ஏற்கனவே பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினால் கைது செய்யப்பட்டவர்கள். இந்நிலையில் இந்த வழக்கில்…

Read More
குடியிருப்பு பகுதிக்கு அருகே கொட்டப்படும் குப்பைகள் : பொதுமக்கள் சாலை மறியல்

குடியிருப்பு பகுதிக்கு அருகே கொட்டப்படும் குப்பைகள் : பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பத்தூர் 36வது வார்டில் குப்பைகளை கொட்டி வரும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலையில் கட்டைகளை வைத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட 36-வது வார்டு பாவுசாநகர் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் ஆட்டு இறைச்சி கழிவுகள் கோழி இறைச்சி கழிவுகள் அனைத்தும் அதே பகுதியில் குடியிருப்புக்கு அருகாமையில் கொட்டப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. அப்பகுதியில்…

Read More
சாலையோரத்தில் கொட்டப்பட்ட மலையளவு கழிவுகள் : நோய் தொற்று அபாயம்

சாலையோரத்தில் கொட்டப்பட்ட மலையளவு கழிவுகள் : நோய் தொற்று அபாயம்

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட 32 வார்டுகளில் நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைக் கழிவுகள், மருத்துவமனைகளில் இருந்து எடுத்து வரப்படும் மருத்துவ கழிவுகள் மற்றும் இறைச்சிகழிவுகள் டிராக்டர்கள் மூலமாக எடுத்து வரப்பட்டு கிருஷ்ணகிரி குப்பம் சாலையில் கொட்டப்பட்டு வருகிறது. கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் குப்பைகளை கொட்டி வருவதால் குப்பைகள் மலைபோல தேங்கி உள்ளது.மேலும் கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து எடுத்து வரப்படும் இறச்சி கழிவுகள் மருத்துவ கழிவுகளை மூட்டை, முட்டை யாககட்டி சாலை ஒரங்களில்…

Read More
மாணவர் விடுதிகளில் மாட்டுக்கறி : அமைச்சர் வன்னியரசு மன்னிப்பு கேட்க வேண்டும் -புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

மாணவர் விடுதிகளில் மாட்டுக்கறி : அமைச்சர் வன்னியரசு மன்னிப்பு கேட்க வேண்டும் -புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

கோவை குனியமுத்தூரில் உள்ள பொதிகை இல்லத்தில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், அரசு மாணவர் விடுதிகளில் மாட்டுக்கறி வழங்குவது குறித்து அமைச்சர் வன்னியரசு தெரிவித்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.தமிழ்நாட்டில் அரசு நடத்தும் பள்ளி, கல்லூரி மற்றும் மாணவர் விடுதிகளில் இதுவரை முட்டை, கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வரும் நிலையில், மாட்டுக்கறி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்திருப்பது பலரது உணர்வுகளை…

Read More
ஆண்டுக்கணக்கில் தகரக் கொட்டகை வாழ்க்கை : உக்கடம் இடம்பெயர்ந்த மக்களின் மறுவாழ்வு எப்போது?

ஆண்டுக்கணக்கில் தகரக் கொட்டகை வாழ்க்கை : உக்கடம் இடம்பெயர்ந்த மக்களின் மறுவாழ்வு எப்போது?

கோயம்புத்தூர் உக்கடம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் பல தலைமுறைகளாக வசித்து வந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள், நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்களுக்காக கடந்த 2018ஆம் ஆண்டு அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், எட்டு ஆண்டுகளாகியும் நிரந்தர வீடுகள் வழங்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டுகின்றனர். தற்போது புல்லுக்காடு ஷெட், குப்பைமேடு பகுதியில் தகரத் தகடுகளால் அமைக்கப்பட்டுள்ள சிறிய தற்காலிகக் குடியிருப்புகளில் வசித்து வரும் தங்களுக்கு, குடிநீர், கழிப்பறை, சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த…

Read More
ஒகேனக்கல் சின்னாறு பகுதியில் காட்டாற்று வெள்ளம் : பொதுமக்கள் மகிழ்ச்சி

ஒகேனக்கல் சின்னாறு பகுதியில் காட்டாற்று வெள்ளம் : பொதுமக்கள் மகிழ்ச்சி

தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த ஒகேனக்கல் சின்னாறு பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒகேனக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், சின்னாறு பகுதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் காட்டாற்று வெள்ளம் போல் மழைநீர் கரைபுரண்டு ஓடுகிறது. இப்பகுதியில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரை பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். தொடர் மழையால் வனப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் மற்றும்…

Read More
தாராபுரம் இடைத்தேர்தல் : அக்.4ல் முதலமைச்சர் ரோடு ஷோ

தாராபுரம் இடைத்தேர்தல் : அக்.4ல் முதலமைச்சர் ரோடு ஷோ

தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளரை ஆதரித்து அக்.4 ம் தேதி முதல்வர் விஜய் ரோடு ஷோ பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து பிரச்சாரத்தின் இறுதி நாளான நான்காம் தேதி அன்று தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தாராபுரம் ருத்ராவதி துவங்கி குண்டடம் தாராபுரம், மூலனூர், தாசர் பட்டி வரை என ரோடு…

Read More
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை : குளித்தலை நகராட்சியில் சிக்கிய பணம்,ஜிபே கணக்கு

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை : குளித்தலை நகராட்சியில் சிக்கிய பணம்,ஜிபே கணக்கு

குளித்தலை நகராட்சியில்கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் சுமார் 7 மணி நேரம் நடத்திய தீவிர சோதனையில் நகராட்சி மேலாளரின் ஜி.பே மூலம் பெறப்பட்ட கணக்கில் வராத ரூ 4 லட்சத்து 2000 ரூபாய் சிக்கியது. கரூர் மாவட்டம்,குளித்தலை நகராட்சிஅலுவலகம் குளித்தலை பெரியபாலம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு நேற்று மதியம் சுமார் 3 மணியளவில் கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி பி.கே.ஜான் தலைமையில்,இன்ஸ்பெக்டர் சுவாமிநாதன் உள்ளிட்ட 10 பேர் அடங்கிய குழுவினர் காரில் வந்தனர். அவர்கள்…

Read More