Headlines

தவெக பிரச்சாரத்தில் பணம் பட்டுவாடா குற்றச்சாட்டு

தவெக பிரச்சாரத்தில் பணம் பட்டுவாடா குற்றச்சாட்டு

அச்சரப்பாக்கம் ஒன்றியத்தில்,
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான
பிரச்சாரம் நடைபெற்றது.

த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல் வேட்பாளராக போட்டியிடும் நிலையில், அவரை ஆதரித்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அச்சரப்பாக்கம் ஒன்றியத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தின்போது, பிரச்சாரத்திற்கு வந்த பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்
பிரச்சாரத்தில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு தலா 500 ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இதனிடையே, மதுராந்தகம் இடைத்தேர்தலில் த.வெ.க சார்பில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படாது என அக்கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் அமைச்சர்
ஆதவ் அர்ஜுனா தெரிவித்திருந்த நிலையில், தற்போது அச்சரப்பாக்கம் ஒன்றியத்தில் பணம் வழங்கப்பட்டதாக எழுந்துள்ள இந்த குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *