Headlines

வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் 7 மணி நேரம் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் 7 மணி நேரம் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக நடத்திய அதிரடி சோதனையில், ஜிபே மூலம் பெறப்பட்ட கணக்கில் வராத ரூ.41 ஆயிரம் கண்டறியப்பட்டது.

வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தின் பொதுப்பிரிவு, நிலப்பிரிவு உள்ளிட்ட துறைகளில் பிறப்பு, இறப்பு சான்றிதழ், கட்டிட அனுமதி, சொத்து வரி விதிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக பொதுமக்களிடம் லஞ்சம் பெறப்படுவதாக தொடர் புகார்கள் வந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராஜு தலைமையிலான அதிகாரிகள், நகராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையின்போது அதிகாரிகளின் செல்போன்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள், பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டதுடன், செல்போன் அழைப்புகள் மற்றும் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையின் முடிவில், ஜிபே மூலம் கணக்கில் வராமல் பெறப்பட்டதாக கூறப்படும் ரூ.41 ஆயிரம் பணம் கண்டறியப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *