Headlines

தாராபுரம் : வீடுகளில் ரூ.48 லட்சம் ரூபாய் பறிமுதல் – தேர்தல் அதிகாரிகள் விசாரணை

தாராபுரம் : வீடுகளில் ரூ.48 லட்சம் ரூபாய் பறிமுதல் - தேர்தல் அதிகாரிகள் விசாரணை

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வருகின்ற 6ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடப்பதை ஒட்டி, பல்வேறு கட்சியில் சார்பில் தீவிர பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் சார்பில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்ட எல்லைகளில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள் அதுமட்டுமின்றி, தாராபுரம் பகுதி முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தாராபுரம் அடுத்த மூலனூர் பகுதியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், கூடுதல் நிலை கண்காணிப்பு குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மூலனூர், தாளக்கரை பிரிவு பகுதியில் உள்ள விஸ்வநாதன் என்பவரது வீட்டிலிருந்து ரூ.40, 79,150, செல்வராஜ் என்பவர் வீட்டிலிருந்து ரூ. 7,63,400 என மொத்தம் 48,42,550 ரூபாய் கைப்பற்றப்பட்டு, தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு கைப்பற்றப்பட்ட பணத்தை மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்க உள்ளதாக வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நெருங்க உள்ள சமயத்தில் சுமார் 48 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது தாராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *