Headlines

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விசாரணையை முடிக்க 3 மாத அவகாசம் – சிபிஐ உச்சநீதிமன்றத்தில் தகவல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விசாரணையை முடிக்க 3 மாத அவகாசம் - சிபிஐ உச்சநீதிமன்றத்தில் தகவல்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விசாரணையை முடிக்க 3 மாத அவகாசம் தேவை என்று வழக்கை விசாரித்து வரும் சிபிஐ முகமை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

வெளியே வந்தவர்களின் ஜாமினை ரத்து செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
ஜாமினை ரத்து செய்தால்தான் சுதந்திரமான விசாரணையை உறுதி செய்ய முடியும் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

குற்றம்சாட்டப்பட்டோர் சாட்சிகளை கலைக்க முயற்சிக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணை நிலவரம் குறித்து 2 வாரங்களில் அறிக்கை தருமாறு சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் சிபிஐ அளிக்கும் நிலை அறிக்கை மீது அனைத்து தரப்பும் இரு வாரங்களில் பதில் தர வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஜாமினை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கான தடை தொடரும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *