Headlines
உதகை : காத்திருந்த தாய் புலி, தாவி குதித்து சென்ற குட்டி புலிகள்

உதகை : காத்திருந்த தாய் புலி, தாவி குதித்து சென்ற குட்டி புலிகள்

உதகை அருகே முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மாயார் கிராமத்திற்கு செல்லக்கூடிய சாலையில் சமீப நாட்களாக இரண்டு குட்டிகளுடன் தாய் புலி ஒன்று அடிக்கடி சாலைகளை கடந்து தண்ணீர் குடிக்க சென்று வருகிறது. புலியை காண சுற்றுலாப் பயணிகள் தனியார் ஜீப்களில் சபாஃரியாக செல்கின்றனர். அவர்கள் புலியை கண்டு பார்த்து வரும் நிலையில் இன்றும் தாய் புலி சாலையை கடக்க வந்தது. ஆனால் குட்டிகள் பின் தொடர்ந்து வராததால் தாய் புலி காத்திருந்தது. பின்னர் வனத்திற்குள் சென்றது.அப்போது…

Read More
மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகத்தில் நவீன தீண்டாமை : கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி

மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகத்தில் நவீன தீண்டாமை : கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி

வேலூர்மாவட்டம்,காட்பாடியில் உள்ள வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் மற்றும் மொழிகள் பள்ளி சார்பில் அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா, பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் இலக்கிய மன்றத்தின் 38ஆம் ஆண்டு துவங்க விழா ஆகிய முத்தமிழ் விழாவானது வி.ஐடி பல்கலைக்கழக வேந்தர் விசுவநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் வி.ஐடி பல்கலைக்கழக துணை தலைவர் சங்கர்,உள்ளிட்டோர் பங்கேற்றனர் இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி கலந்துகொண்டு கிளிம்பஸ் ஆப் இந்தியன் பாலிடிக்ஸ் லைவ் என்ற நூலை…

Read More
ஜெம் வீரமணி வழக்கு : கடந்த அரசை குறை கூறுவது பொருத்தமாக இருக்காது : கார்த்திக் சிதம்பரம்

ஜெம் வீரமணி வழக்கு : கடந்த அரசை குறை கூறுவது பொருத்தமாக இருக்காது : கார்த்திக் சிதம்பரம்

ஜெம் வீரமணி சிறார் பாலியல் வன்கொடுமை வழக்கில் கடந்த ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுவதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை. எனவே, அவர்களை குற்றம்சாட்டுவது பொருத்தமாக இருக்காது. இந்த விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டவர்கள் யார், யார் யாருக்கு பணம் சென்றுள்ளது என்பதையும் விசாரிக்க வேண்டும் என சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜெம் வீரமணி தொடர்பான பாலியல் வழக்கில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு…

Read More
ஒருமனதாகவே முடிவுகள் எடுக்கப்பட்டன - தேர்தல் ஆணையம் விளக்கம்

ஒருமனதாகவே முடிவுகள் எடுக்கப்பட்டன – தேர்தல் ஆணையம் விளக்கம்

தேர்தல் ஆணையர்களின் கருத்துகளை தலைமைத் தேர்தல் ஆணையர் நிராகரித்ததாக புகார் எழுந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. அரசமைப்பு 324ஆவது பிரிவின் கீழ் சட்டப்பூர்வ விதிகள், நடைமுறைகளை பின்பற்றியே ஆணையம் செயல்படுகிறது.முடிவெடுக்கும் முன் பல்வேறு கருத்துகள், கருத்து வேறுபாடுகள் எழுதுவது இயல்பானதுதான். ஆணையர்கள் மட்டுமின்றி ஆணையத்தின் ஒவ்வொரு அதிகாரியும் பரிந்துரைகளை கூற அதிகாரம் உண்டு.எஸ்.ஐ.ஆர். உள்பட 40 புதிய திட்டங்கள்,சீர்திருத்தங்கள் ஒருமனதான முடிவுகளின்படி எடுக்கப்பட்டவை. ஜனநாயகத்தை காக்க, அரசமைப்பு கடமைகளை நேர்மையுடன் நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளது.என…

Read More
நடுவானில் இயந்திர கோளாறு : சென்னையில் தரையிரங்கிய வியட்நாம் விமானம்

நடுவானில் இயந்திர கோளாறு : சென்னையில் தரையிரங்கிய வியட்நாம் விமானம்

வியட்நாம் நாட்டிலிருந்து, இலங்கைக்கு சென்று கொண்டு இருந்த, வியட் ஜெட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், செவ்வாய் இரவு நடு வானில், சுமார் 36,000 அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்தபோது, விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம், சென்னை விமான நிலையத்தில், அவசரமாக பாதுகாப்பாக, தரையிறக்கப்பட்டது. வியட்நாம் நாட்டில் உள்ள (Ho Chi Minh City)ஹோ சீ மஞ்ச் சிட்டி, சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, இலங்கை தலைநகர் கொழும்புவுக்கு, செவ்வாய்க்கிழமை மாலை…

Read More
மோசமான சாலை பராமரிப்பு : சுங்கச்சாவடி ஒப்பந்ததாரருக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த நுகர்வோர் நீதிமன்றம்

மோசமான சாலை பராமரிப்பு : சுங்கச்சாவடி ஒப்பந்ததாரருக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த நுகர்வோர் நீதிமன்றம்

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்பட்டும், மோசமான சாலை பராமரிப்பை மேற்கொண்ட ஒப்பந்ததாரருக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்து கிருஷ்ணகிரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ்பாபு(48). இவர், ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் நாள்தோறும் தனது வாகனத்தில் ஓசூருக்கு சென்று வருகிறார். இவர், கிருஷ்ணகிரி சுங்கச்சாவடிக்கு உட்பட்ட சாலையை பயன்படுத்தி வரும் நிலையில், அதற்காக சுங்ககட்டணம் செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில், கிருஷ்ணகிரி சுங்கசாவடிக்கு உட்பட்ட சாலைகளில் சரியாக…

Read More
ஸ்ரீவில்லிபுத்தூர் : 10 வது நாளாக தொடரும் நெசவாளர்கள் போராட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் : 10 வது நாளாக தொடரும் நெசவாளர்கள் போராட்டம்

கூலி உயர்வு மற்றும் நிவாரணம் வழங்க கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் நெசவாளர்கள் 10 வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் நகரில் 6 நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கங்கள் மூலம் 3000-க்கும் மேற்பட்ட பெடல் தறிகளில் பிரதானமாக பொங்கல் தொகுப்பில் அரசு வழங்கும் சேலை நெசவு செய்யப்பட்டு வருகிறது. 2027 பொங்கல் பண்டிகைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பார்டர் உடன் கூறிய புதிய ரக சேலைக்கு கூலி நிர்ணயம் செய்ய வேண்டும். 6…

Read More
உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு காமராஜர் பெயரில் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு : அமைச்சர் விஸ்வநாதன்

உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு காமராஜர் பெயரில் ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு : அமைச்சர் விஸ்வநாதன்

காமராஜர் பெயரில் தமிழக அரசு 5 ஆண்டுகளுக்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இத்தொகை கல்லூரி கட்டிடங்கள், விளையாட்டு மைதானங்கள், நூலகங்கள் மற்றும் ஆய்வகங்கள் போன்ற உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்குப் பயன்படுத்தப்படும் என அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார். தமிழ்நாடு அரசு உயர்கல்வித் துறை சார்பில், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் திருச்சி காஜாமலை பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, பாரதிதாசன்…

Read More
தவெக வேட்பாளர் வெற்றி பெற்றால் பெரிய பெட்டியுடன் வேறு கட்சிக்கு செல்வார் : பொள்ளாச்சி ஜெயராமன்

தவெக வேட்பாளர் வெற்றி பெற்றால் பெரிய பெட்டியுடன் வேறு கட்சிக்கு செல்வார் : பொள்ளாச்சி ஜெயராமன்

மறுபடியும் தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றி பெற்றால் பெரிய பெட்டியுடன் வேறு கட்சிக்கு செல்வார் என முன்னாள் துணை சபாநாயகர்பொள்ளாச்சி ஜெயராமன் பிரச்சாரத்தின் போது பேசினார். திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தாராபுரம் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் பானுமதிக்கு ஆதரவாக முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. பொட்டிக்காம்பாளையம், தாசார்பட்டி பிரிவு, சித்தூர், முண்டுவேலாம்பட்டி, பொம்மநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அதிகாலை முதல்…

Read More
அரசுப்பள்ளி ஆசிரியை வீட்டில் ரூ.20 லட்சம் நகை திருட்டு : பட்டப்பகலில் துணிகரம்

அரசுப்பள்ளி ஆசிரியை வீட்டில் ரூ.20 லட்சம் நகை திருட்டு : பட்டப்பகலில் துணிகரம்

புளியங்குடியில் பட்டபகலில் அரசுப்பள்ளி ஆசிரியையின் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 20 லட்சம் மதிப்பிலான நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி மாவட்டம் புளியங்குடி டிஎன்புதுக்குடி மார்க்கெட் அருகில் கற்பகவீதி தெற்குதெரு முத்துக்குமார்(40) இவர் டிவிஎஸ்தனியார் பைனான்ஸ் மேலாளராகவும் இவரது மனைவி சுதா(34) என்பவர் அரசு பள்ளியில் ஆசிரியையாகவும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியை சுதா என்பவர் தனது இரண்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளார். இதன்…

Read More