திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் தாராபுரம் தொகுதியில் திமுக, அதிமுக, தவெக, நாதக இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய ஐந்து கட்சிகள் போட்டியிடுகின்றன.
கடந்த சில நாட்களாக தவெக வேட்பாளரை விமர்சிக்கும் வகையில் திமுகவினர் சூட்கேஸ் வைத்து பெட்டி பாபா என வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று திமுக தலைமை கழக பேச்சாளர் கோவிந்தன், வஞ்சிபாளையம் வரப்பாளையம் ஆலம்பாளையம் வடுகபாளையம் ஆகிய பகுதிகளில் குடுகுடுப்பை அடித்தபடி நல்ல காலம் பிறக்குது நல்ல காலம் பிறக்குது திமுகவிற்கு வாக்களித்தால் நல்ல காலம் பிறக்குது இந்த ஆட்சியில் விலைவாசி உயர்ந்து மக்கள் கஷ்டப்படுது என வீடு வீடாக குடுகுடுப்பை அடித்தபடி திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார்.
தேர்தல் வந்துவிட்டாலே கட்சிகள் பல்வேறு நூதன பிரச்சாரங்களை மேற்கொள்ளும். தாராபுரம் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்த நிலையில் இன்னும் என்னென்ன வகையான பிரச்சாரங்களை கட்சிகள் மேற்கொள்ள இருக்கின்றன என்பதை வாக்காளர்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.
