Headlines
குப்பைகளை கொட்ட எதிர்ப்பு, சாலை மறியல், கடையடைப்பு, கருப்பு கொடி : திருமுருகன்பூண்டியில் பரபரப்பு

குப்பைகளை கொட்ட எதிர்ப்பு, சாலை மறியல், கடையடைப்பு, கருப்பு கொடி : திருமுருகன்பூண்டியில் பரபரப்பு

திருமுருகன்பூண்டி நகராட்சி அம்மாபாளையத்தில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கடைகளை அடைத்து வீடுகளுக்கு முன்பு கருப்பு கொடி கட்டி, போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட அம்மாபாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழிகளில் மாநகராட்சி குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் இன்று பல்வேறு கட்ட போராட்டத்தை மேற்கொண்டனர். குப்பை கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதுடன், தங்கள் வாழ்வாதாரத்திற்கும், பொதுமக்களின் சுகாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படும் எனக்…

Read More
கவனமின்றி திறக்கப்பட்ட தானியங்கி கதவு : மாணவர்கள் காயம்

கவனமின்றி திறக்கப்பட்ட தானியங்கி கதவு : மாணவர்கள் காயம்

புதுக்கோட்டை அருகே அரசு நகரப் பேருந்தில் தானியங்கி கதவு திறந்ததால் அதில் பயணித்த பள்ளி மாணவர்கள் பலர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கீரனூரில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற அரசு நகரப் பேருந்து (8-ம் எண்) ரங்கம்மா சத்திரம் பகுதியில் நின்றபோது, அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பேருந்தில் ஏறினர். மாணவர்கள் பேருந்தில் ஏறியதும், ஓட்டுநர் தானியங்கி கதவை மூடியுள்ளார்.ஏற்கனவே பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால், மாணவர்கள் கடும் சிரமத்துடன் பயணித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பேருந்தில்…

Read More
இன்ஸ்டா ரீல்ஸால் கேங் வார் : 15 சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு

இன்ஸ்டா ரீல்ஸால் கேங் வார் : 15 சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு

பல்லடம் அருகே சமூக வலைதளத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக இரண்டு பகுதிகளைச் சேர்ந்த சிறுவர்களிடையே அடுத்தடுத்து நடந்த மோதல் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சேடபாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன், கடந்த 30-ம் தேதி இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தில் ரீல்ஸ் வெளியிட்டுள்ளார். அறிவொளி நகரைச் சேர்ந்த மற்றொரு 17 வயது சிறுவன் இது குறித்து இன்ஸ்டாவில் குறுஞ்செய்தி அனுப்பி கேட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து இருவரும் தொலைபேசியில் தொடர்பு…

Read More
போதையில் தகராறு : எஸ்.ஐயை கீழே தள்ளிய வாலிபர்களுக்கு வலை

போதையில் தகராறு : எஸ்.ஐயை கீழே தள்ளிய வாலிபர்களுக்கு வலை

போதையில் தகராறு செய்தவர்களை பிடிக்க முயன்ற சிறப்பு எஸ்.ஐயை கீழே தள்ளி தப்பியோடிய இரண்டு வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர். துாத்துக்குடி மாவட்டம், ஆத்துார் கடைவீதியில் நேற்று முன்தினம் இரவு குடி போதையில் இருந்த இரண்டு வாலிபர்கள் அந்த வழியாக செல்வோரிடம் தகராறு செய்துள்ளனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பொன் முனியசாமி, 58, என்பவர் அந்த வாலிபர்களை விசாரிக்க முயன்றபோது, இருவரும் அவரை கீழே தள்ளிவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில் தலைப்பகுதியில் பலத்த…

Read More
மதுராந்தகம் அருகே மரகத முருகர் சிலை திருட்டு : போலீசார் விசாரணை

மதுராந்தகம் அருகே மரகத முருகர் சிலை திருட்டு : போலீசார் விசாரணை

மதுராந்தகம் அருகே பெருக்கருணை மரகத பால தண்டாயுதபாணி கோவிலில் மரகத முருகர் சிலை திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் அருகே உள்ளது பெருங்கருணை கிராமம். இந்த கிராமத்தில் ஆலமரங்களுக்கு இடையில் கனகமலை என அழைக்கப்படும் நடுபழனி மலை அமைந்துள்ளது. இந்த மலையின் மேற்கு அடிவாரத்தில் முருகர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் மரகதத்தால் ஆன முருகர் சிலை உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு இந்த கோவிலின் பூட்டை உடைத்த மர்ம…

Read More
சேலம் பெண் கொ** வழக்கு : காதல் ஜோடி உட்பட 3பேர் கைது

சேலம் பெண் கொ** வழக்கு : காதல் ஜோடி உட்பட 3பேர் கைது

சேலத்தில் பெண்ணை ஏழு துண்டுகளாக வெட்டி தண்ணீர் தொட்டியில் வீசிய வழக்கில் இளம் காதல் ஜோடி மற்றும் கறிக்கடைக்காரரை போலீசார் கைது செய்தனர். நான்கு பவுன் நகைக்காக பெண்ணை துண்டு துண்டாக வெட்டி கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. சேலம் மாநகர் அரிசிபாளையம் பகுதியில் குணபால ராமசாமி தெருவை சேர்ந்த ரமேஷ் (62)கோவில் பூசாரி இவர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது குடும்பத்துடன் தஞ்சாவூருக்கு சென்று அடுத்தநாள் அதிகாலை வீட்டிற்கு திரும்பினார் . விடியற்காலை குளிப்பதற்கு வீட்டு…

Read More
நகையை திருப்பி கேட்ட பெண் வெட்டி கொ**: போலீஸ்காரர் வெறிச்செயல்

நகையை திருப்பி கேட்ட பெண் வெட்டி கொ**: போலீஸ்காரர் வெறிச்செயல்

தூத்துக்குடி அருகே நகையை திருப்பி கேட்ட பெண்ணை வெட்டி கொன்ற காவலரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தலை சேர்ந்தவர் வெங்கடசுப்பிரமணியன். இவருடைய மனைவி பிரியா (39). இவர் அந்த பகுதியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்தார். இவரது சகோதரி முத்துலட்சுமி என்பவருடன், தட்டார்மடத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் முத்துக்குமார் (36) என்பவர் பழகி வந்தாராம். இதனால் முத்துலட்சுமியின் நகைகளை வாங்கி முத்துக்குமார் அடமானம் வைத்ததாக கூறப்படுகிறது. இதனை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி…

Read More
சோலையார் அணையில் மூழ்கி பெங்களூர் தொழிலாளி உயிரிழப்பு

சோலையார் அணையில் மூழ்கி பெங்களூர் தொழிலாளி உயிரிழப்பு

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த குரங்குமுடி எஸ்டேட் பாரதிதாசன் நகர் பகுதியில் உள்ள கட்டிடத்திற்குடைல்ஸ் ஒட்டும் பணிக்காக பெங்களூரை சேர்ந்த தொழிலாளி பிரான்சிஸ் மற்றும் அவரது குழுவினர் வந்துள்ளனர். இன்று பணி முடிந்து ஊருக்கு திரும்ப இருந்தனர். இந்நிலையில் குளிப்பதற்காக அப்பகுதியில் உள்ள சோலையார் அணைக்கு சென்றனர். அப்போது நீருக்குள் மூழ்கி பிரான்சிஸ் உயிரிழந்தார். இதைகண்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக வால்பாறை தீயணைப்பு துறைக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்…

Read More
மேற்கு தொடரச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ - தீயணைப்பு பணி தீவிரம்

மேற்கு தொடரச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ – தீயணைப்பு பணி தீவிரம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் சாம்பல் நில அணில்கள் சரணாலயம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர்- மேகமலை புலிகள் சரணாலயம் ஆகிய இரண்டு சரணாலயங்கள் இயங்கி வருகின்றன. இந்த அடர்ந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை,மிளா, மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. மேலும் இப்பகுதியில் பல அறிய வகை மூலிகை செடிகளும் அமைந்துள்ளது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அழகர் கோயில் பீட் கெடாபள்ளம் பகுதியில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.பற்றி…

Read More
அடுத்தடுத்த கடைகளில் கைவரிசை : முகமூடி கொள்ளையன் அட்டகாசம்

அடுத்தடுத்த கடைகளில் கைவரிசை : முகமூடி கொள்ளையன் அட்டகாசம்

கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபம் பகுதியில் அடுத்தடுத்து மூன்று கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அழகியமண்டபம் பகுதியில் நள்ளிரவில் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர், இரும்பு கட்டரை பயன்படுத்தி அடுத்தடுத்து மூன்று கடைகளின் ஷட்டர் பூட்டுகளை வெட்டி உடைத்துள்ளார். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கோவில் ஒன்றின் பூட்டையும் உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர், அங்கிருந்த ஒரு சவரன் தங்க நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை திருடிச்…

Read More