விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் சாம்பல் நில அணில்கள் சரணாலயம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர்- மேகமலை புலிகள் சரணாலயம் ஆகிய இரண்டு சரணாலயங்கள் இயங்கி வருகின்றன.
இந்த அடர்ந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை,மிளா, மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

மேலும் இப்பகுதியில் பல அறிய வகை மூலிகை செடிகளும் அமைந்துள்ளது.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அழகர் கோயில் பீட் கெடாபள்ளம் பகுதியில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.
பற்றி எரிந்து வரும் காட்டுத்தீயை வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சுமார் 30 க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
