Headlines

சோலையார் அணையில் மூழ்கி பெங்களூர் தொழிலாளி உயிரிழப்பு

சோலையார் அணையில் மூழ்கி பெங்களூர் தொழிலாளி உயிரிழப்பு

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த குரங்குமுடி எஸ்டேட் பாரதிதாசன் நகர் பகுதியில் உள்ள கட்டிடத்திற்கு
டைல்ஸ் ஒட்டும் பணிக்காக பெங்களூரை சேர்ந்த தொழிலாளி பிரான்சிஸ் மற்றும் அவரது குழுவினர் வந்துள்ளனர்.

இன்று பணி முடிந்து ஊருக்கு திரும்ப இருந்தனர்.

இந்நிலையில் குளிப்பதற்காக அப்பகுதியில் உள்ள சோலையார் அணைக்கு சென்றனர்.

அப்போது நீருக்குள் மூழ்கி பிரான்சிஸ் உயிரிழந்தார்.

இதைகண்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக வால்பாறை தீயணைப்பு துறைக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பிரான்சிசின் உடலை மீட்டனர்.

இதுகுறித்து வால்பாறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *