Headlines
பொள்ளாச்சி ஜெயராமன் மகன் மீது கொலை வழக்கு : நீதிமன்றத்தில் மனு

பொள்ளாச்சி ஜெயராமன் மகன் மீது கொலை வழக்கு : நீதிமன்றத்தில் மனு

முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன் குமார் ஏற்படுத்திய வழக்கை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என தவெக செய்தி தொடர்பாளர் புகழேந்தி திருப்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தவெக செய்தி தொடர்பாளர் புகழேந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், 2016ல் கோவை கல்லூரியில் இருந்து புறப்பட்ட வாகனத்தில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் உட்பட 6 பேர் பயணித்த வாகனம் விபத்துக்கு உள்ளாகி வீரசுரேகா என்ற பெண் உயிரிழந்தார். ஆனால்…

Read More
என்.எல்.சி தொழிலாளர்கள் பணி நீக்கம் : தமிழக அரசு தலையிட அன்புமணி வலியுறுத்தல்

என்.எல்.சி தொழிலாளர்கள் பணி நீக்கம் : தமிழக அரசு தலையிட அன்புமணி வலியுறுத்தல்

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெய்வேலியில் உள்ள என்.எல்.சி நிறுவனத்தின் 1, 1ஏ, 2 ஆகிய நிலக்கரி சுரங்கங்களின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்த 347 ஒப்பந்தத் தொழிலாளர்கள் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அடுத்த சில வாரங்களில் மேலும் 713 பேரை பணி நீக்கம் செய்ய என்.எல்.சி நிர்வாகம் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. என்.எல்.சி நிறுவனத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் தொழிலாளர்களை எந்த முன்னறிவிப்பும் இல்லாமல்…

Read More
அமைச்சர் பேச்சை அவை குறிப்பில்இருந்து நீக்குங்க : தங்கம் தென்னரசு வைத்த கோரிக்கை

அமைச்சர் பேச்சை அவை குறிப்பில்இருந்து நீக்குங்க : தங்கம் தென்னரசு வைத்த கோரிக்கை

அமைச்சரின் கருத்து தவறான புரிதலை ஏற்படுத்திவிடும் எனமுன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு சுட்டிக்காட்டியதை தொடர்ந்து குறிப்பிட்ட அந்த கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வனத்துறை சார்ந்த கேள்வி பதில் நேரத்தில் பேசிய தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், கேரளாவில் காட்டுப்பன்றி வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், அதேபோல் தமிழ்நாட்டிலும் காட்டுப்பன்றியை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் அல்லது அவற்றை சுட்டுக்கொல்ல உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கையை முன்வைத்தார். இதற்குப்…

Read More
திமுக ஆட்சியில் பதியப்பட்ட வழக்குகள் ரத்து : முதல்வர் விஜய் அறிவிப்பு

திமுக ஆட்சியில் பதியப்பட்ட வழக்குகள் ரத்து : முதல்வர் விஜய் அறிவிப்பு

கடந்த திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படும் என முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் அறிவித்தார். இதுகுறித்து விதி எண் 110-இன் கீழ் முதல்வர் விஜய் இன்று சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பில், 2021 முதல் 2026 வரை விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும். மனிதநேய அடிப்படையிலும் ஜனநாயகக் கொள்கைகளின் அடிப்படையிலும் வழக்குகளை வாபஸ் பெற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை சிப்காட் தொழிற்பேட்டை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டோர்…

Read More
கீழடியில் இளைஞர் வெட்டிக் கொ** : கிராம மக்கள் சாலைமறியலால் பரபரப்பு

கீழடியில் இளைஞர் வெட்டிக் கொ** : கிராம மக்கள் சாலைமறியலால் பரபரப்பு

சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே 24 வயது இளைஞர் ஒருவர் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலந்தைகுளம் கிராமத்தைச் சேர்ந்த அழகப்பன் என்பவரது மகன் மாயக்கண்ணன் என்ற இளைஞர் ஜேசிபி ஆப்ரேட்டராக பணியாற்றி வந்தார். இவர் பணி நிமித்தமாக கீழடி பள்ளிச்சந்தை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, இருசக்கர வாகனங்களை வந்த எட்டு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வழிமறித்து விரட்டி சென்று அரிவாளால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சம்பவ…

Read More
கடைகளில் தகராறு, கீழே தள்ளப்பட்ட எஸ்.ஐ : சிசிடிவி காட்சியில் சிக்கிய இளைஞர்கள்

கடைகளில் தகராறு, கீழே தள்ளப்பட்ட எஸ்.ஐ : சிசிடிவி காட்சியில் சிக்கிய இளைஞர்கள்

திருச்செந்தூர் அருகே கடைகளில் தகராறில் ஈடுபட்ட இளைஞர்களை தடுக்க முயன்ற உதவி ஆய்வாளரை கீழே தள்ளிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்செந்தூர் அருகே உள்ள ஆத்தூரை சேர்ந்த ஜான் மகன் ராகேஷ் மற்றும் அந்தோனி மகன் எமர்சன் ஆகிய இருவரும் ஆத்தூர் பஜார் பகுதியில் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் இடையூறாக தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஆத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்…

Read More
பள்ளி வளாகத்திற்குள் புகுந்த மலைப்பாம்பு : அலறி ஓடிய மாணவர்கள்

பள்ளி வளாகத்திற்குள் புகுந்த மலைப்பாம்பு : அலறி ஓடிய மாணவர்கள்

வாணியம்பாடி அருகே மலைகிராமத்தில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் புகுந்த 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டு வனப்பகுதியில் விட்டனர். வாணியம்பாடி அடுத்த ஜவ்வாது மலைத்தொடரில் அமைந்துள்ள மலைரெட்டியூர் மலைகிராமம். இக்கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில், இன்று 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு, பள்ளி வளாகத்தில் புகுந்தது. உடனடியாக இதனை கண்ட பள்ளி மாணவர்கள் அலறியடித்து பள்ளி வகுப்பறையில் இருந்து வெளியேறியனர். உடனடியாக இதுகுறித்து, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊர் மக்கள் ஆலங்காயம் வனத்துறையினருக்கு…

Read More
திருட்டு புகாரால் தாய் தற்கொ** : நடவடிக்கை எடுக்ககோரி மகன் எஸ்.பியிடம் மனு

திருட்டு புகாரால் தாய் தற்கொ** : நடவடிக்கை எடுக்ககோரி மகன் எஸ்.பியிடம் மனு

தனது தாயின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மகன் அளித்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம், சென்னிமலை மேலப்பாளையம் சர்க்கார் கிணறு தெருவை சேர்ந்த துரைசாமியின் மகன் தீனதயாளன் (29). இவர் ஈரோடு மாவட்ட. காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். எம்பிஏ பட்டம் பெற்ற இவர்,திரைத்துறையில் ஆடை வடிவமைப்பாளராகவும், கிரியேட்டராகவும் பணியாற்றி வந்ததாகவும், தந்தை இறந்த பின்னர் வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வந்ததாகவும்…

Read More
அரசு மருத்துவமனை வளாகத்தில் மோதல் : கொத்தாக துக்கிய காவல்துறை

அரசு மருத்துவமனை வளாகத்தில் மோதல் : கொத்தாக துக்கிய காவல்துறை

உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் அரசு மருத்துவமனை வளாகத்தில் சண்டை போட்டுக்கொண்ட இளைஞர்களைமடக்கிப் பிடித்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் அரசு மருத்துவமனை வளாகத்தில் இளைஞர்கள் சிலர் திடீரென ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டு அடிதடியில் ஈடுபட்டனர். நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் அதிகளவில் இருந்த நேரத்தில் நடந்த இந்தத் திடீர் மோதலால், மருத்துவமனைப் பணியாளர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். அரசு மருத்துவமனை வளாகத்தில் இளைஞர்கள்…

Read More
பாம்பை அடித்து கொன்ற எஸ்.ஐ : சமூக வலைதளங்களில் பாரட்டும், விமர்சனமும்

பாம்பை அடித்து கொன்ற எஸ்.ஐ : சமூக வலைதளங்களில் பாரட்டும், விமர்சனமும்

தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் குண்டுமேடு பகுதியில் இன்று இரவு ரோந்து பணியில் பீர்க்கன்காரணை காவல் நிலைய உதவி ஆய்வாளர் விக்டர் ராஜய்யா ஈடுபட்டிருந்தார். அப்போது குண்டுமேடு சுடுகாடு அருகே சுமார் பாம்பு ஒன்று இருப்பதாக பொதுமக்கள் கூச்சலிட்டனர். தகவல் அறிந்து அங்கு சென்ற உதவி ஆய்வாளர் விக்டர் ராஜய்யா, பாம்பை பிடித்து அப்புறப்படுத்த முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர் சீருடையில் பாம்பை பிடித்து அடிக்கும் காட்சியை அங்கிருந்த பொதுமக்கள் சிலர் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ…

Read More