மதுராந்தகம் அருகே பெருக்கருணை மரகத பால தண்டாயுதபாணி கோவிலில் மரகத முருகர் சிலை திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம் அருகே உள்ளது பெருங்கருணை கிராமம். இந்த கிராமத்தில் ஆலமரங்களுக்கு இடையில் கனகமலை என அழைக்கப்படும் நடுபழனி மலை அமைந்துள்ளது.
இந்த மலையின் மேற்கு அடிவாரத்தில் முருகர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் மரகதத்தால் ஆன முருகர் சிலை உள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு இந்த கோவிலின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் மரகத முருகன் சிலையை திருடி சென்றனர்.
இது குறித்து
சித்தாமூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருடப்பட்ட முருகர் சிலை பல கோடி ரூபாய் மதிப்பானது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
