Headlines

கவனமின்றி திறக்கப்பட்ட தானியங்கி கதவு : மாணவர்கள் காயம்

கவனமின்றி திறக்கப்பட்ட தானியங்கி கதவு : மாணவர்கள் காயம்

புதுக்கோட்டை அருகே அரசு நகரப் பேருந்தில் தானியங்கி கதவு திறந்ததால் அதில் பயணித்த பள்ளி மாணவர்கள் பலர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கீரனூரில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற அரசு நகரப் பேருந்து (8-ம் எண்) ரங்கம்மா சத்திரம் பகுதியில் நின்றபோது, அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பேருந்தில் ஏறினர்.

மாணவர்கள் பேருந்தில் ஏறியதும், ஓட்டுநர் தானியங்கி கதவை மூடியுள்ளார்.
ஏற்கனவே பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால், மாணவர்கள் கடும் சிரமத்துடன் பயணித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து பேருந்தில் இருந்த பயணிகள், மாணவர்களை ஒழுங்குபடுத்துவதற்காக தானியங்கி கதவை திறக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஓட்டுநர், தானியங்கி கதவு அருகே மாணவர்கள் நிற்பது தெரியாமல் கதவை திறந்ததாக கூறப்படுகிறது.

திடீரென கதவு திறந்ததால், அதில் சிக்கி பல மாணவர்கள் காயமடைந்தனர். மேலும், சில மாணவர்கள் பேருந்தில் இருந்து கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்ததாக கூறப்படுகிறது.

காயமடைந்த மாணவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதிக கூட்டம் உள்ள நேரங்களில் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பேருந்துகளில் உரிய முறையில் பயணிகளை ஒழுங்குபடுத்தவும், தானியங்கி கதவுகளை பாதுகாப்பாக இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *