போதையில் தகராறு செய்தவர்களை பிடிக்க முயன்ற சிறப்பு எஸ்.ஐயை கீழே தள்ளி தப்பியோடிய இரண்டு வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
துாத்துக்குடி மாவட்டம், ஆத்துார் கடைவீதியில் நேற்று முன்தினம் இரவு குடி போதையில் இருந்த இரண்டு வாலிபர்கள் அந்த வழியாக செல்வோரிடம் தகராறு செய்துள்ளனர்.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பொன் முனியசாமி, 58, என்பவர் அந்த வாலிபர்களை விசாரிக்க முயன்றபோது, இருவரும் அவரை கீழே தள்ளிவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இதில் தலைப்பகுதியில் பலத்த காயமடைந்த பொன் முனியசாமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், தப்பியோடிய ஆத்துார் பரதர் தெருவைச் சேர்ந்த ராகேஷ், 28, எமர்சன், 26, ஆகியோரை தேடி வருகின்றனர்.
