வழக்கறிஞர்கள் – விசாரணைக்கு வந்தவர்கள் இடையே கைகலப்பு : நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
கோவை நீதிமன்ற வளாகத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த இருவருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே திடீரெனக் கடுமையான கைகலப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. கோவை, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று வழக்கமான வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்தன. அப்போது நீதிமன்றத்திற்கு வந்த ஒரு தரப்பினர், தங்களுக்கு எதிரத்தரப்பைச் சேர்ந்தவர்களின் காரின் நான்கு சக்கரங்களிலும் இருந்த காற்றை திடீரென இறக்கிவிட்டு உள்ளனர். இதனைத் தற்செயலாகக் கண்ட…
