வட மாநில வாலிபர் கொலை வழக்கு : உடலை புதைத்து விட்டு தப்பிய திரிபுராவை சேர்ந்த 6 பேர் கைது!
கோவை அருகே வடமாநில வாலிபரை கொலை செய்து உடலை புதைத்து விட்டு தப்பி சென்ற திரிபுராவை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை அருகே உள்ள ஒத்தக்கால் மண்டபம், தண்ணீர் பந்தல் பகுதியில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க ஆங்காங்கே குழி தோண்டப்பட்டு உள்ளது. இந்நிலையில் அங்கு உள்ள ஒரு குழிக்குள் ஒரே கை, மட்டும் வெளியே தெரிந்த நிலையில் வாலிபரின் உடல் புதைக்கப்பட்ட…
