ஆக்சனில் இறங்கிய சென்னை போலீஸ் : பல்வேறு மாநிலங்களில் சைபர் குற்றவாளிகள் கைது
சைபர் குற்றவாளிகளைப் பிடிக்க சென்னை பெருநகர காவல் ஆணையரால் அமைக்கப்பட்ட 4 தனிப்படை போலீசார், தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் முகாமிட்டு 10 நபர்களை அதிரடியாக கைது செய்தனர். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ் உத்தரவின்பேரில், மத்திய குற்றப் பிரிவின் (CCB) சைபர் குற்ற காவல் நிலையம் மற்றும் வடக்கு மண்டல சைபர் குற்ற காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பல்வேறு சைபர் நிதி மோசடி வழக்குகளில், வெளிமாநிலங்களில் தலைமறைவாக…
