அரசு ஸ்டான்லி மருத்துவ பிரேத கிடங்கில் சடலங்களை புகைப்படம் எடுத்ததாக 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவத்தில், மருத்துவமனை ஊழியர் மற்றும் காவல் ஆய்வாளர் மீது லஞ்ச புகார் தெரிவித்து கைதானவர்களின் உறவினர்கள் வாக்குவாத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை பெரம்பூர் கொடுங்கையூர் பகுதியில் வசித்து வந்தவர் ஆனந்த் என்கின்ற பல்லு ஆனந்த். இவர் உடல்நல குறைவால் நேற்று உயிரிழந்துள்ளார்.
இவரது உடலானது அரசு ஸ்டான்லி மருத்துவ பிரேத கிடங்கில் வைக்கப்பட்டிருக்கிறது.
பிரேத கிடங்கில் இருக்கும் இவரது உடலை பார்க்க வேண்டும் என இன்று அதிகாலை பல்லு ஆனந்தின் நண்பர்கள் தினேஷ் குமார் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர்
பிரேதக் கிடங்கின் ஊழியரான சீனிவாசனிடம் கேட்டுள்ளனர் அதற்கு அவர் அனுமதி மறுத்துள்ளார்.
பின்னர் இயற்கை உபாதை கழிப்பதற்காக சீனிவாசன் சென்ற போது தற்காலிக பணியாளரான சங்கர் என்பவரிடம் பிரேத கிடங்கின் சாவியை கொடுத்துச் சென்றுள்ளார்.
அப்போது தினேஷ் மற்றும் சதீஷ் ஆகியோர் தற்காலிக பணியாளர் சங்கரிடம் 200 ரூபாய் கொடுத்து பிரேத கிடங்கில் உள்ளே சென்று இருக்கிறார்கள்.
உள்ளே சென்று அவர்கள் நண்பனின் உடலை மட்டும் பார்க்காமல் மற்ற உடலையும் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்கள்
இதனை சீனிவாசன் பார்த்துவிட்டு அங்கிருந்த போலீசாரிடம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
உடனடியாக போலீசார் சதீஷ்குமார் மற்றும் தினேஷ் குமாரை கைது செய்தனர்.
பப்லு ஆனந்தின் நண்பர்கள் தினேஷ், சதீஷ் மற்றும்
200 ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு உள்ளே அனுமதித்த தற்காலிக ஊழியர் ஷங்கர் என 3 பேரை கைது செய்து நீதிமன்ற ஆஜருக்கு அழைத்துச் சென்றனர்
இந்த சம்பவத்தில் நேரடி தொடர்பு இல்லாவிட்டாலும் கிடங்கில் சாவியை கொடுத்த காரணத்திற்காக
சீனிவாசன் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் சதீஷ்குமாரின் குடும்பத்தினர் சீனிவாசனை மட்டும் மருத்துவமனை நிர்வாகமும் போலீசாரும் காப்பாற்றுவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.
அவர்க்ள கூறுகையில், நாங்கள் போலீசாரிடம் பேசிய போது மருத்துவமனை நிர்வாகம் உங்களை விட சொன்னால் விட்டுவிடுகிறோம் அப்படி நாங்கள் அவர்களை விட்டு விட்டால் எங்களை பார்த்து கவனித்து விட்டு போ என்று பெண் ஆய்வாளர் கேட்டதாகவும் பரபரப்பாய் பணத்தை எடுத்து கையில் காட்டி பகீர் குற்றச்சாட்டை கூறினர்.
மேலும் உள்ளே சென்று அத்துமீறி புகைப்படம் எடுத்தது தவறு என்றால் 200 லஞ்சம் பெற்றுக் கொண்டு உள்ளே அனுமதித்த சங்கரை கைது செய்தது போலவே அவரிடம் சாவியை கொடுத்த சீனிவாசனையும் கைது செய்ய வேண்டும். அவரை விடுவித்தால் மற்ற மூவரையும் விடுவிக்க வேண்டும் என்று கூறி
வாக்குவாதம் செய்தனர்
இறந்த பல்லு ஆனந்த் மற்றும் சதீஷ்குமார் இருவர் மீதும் வியாசர்பாடி காவல் நிலையத்தில் கொலை வழக்குகள் உள்ளதும், இவர்கள் பி கேட்டகிரி சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
