Headlines

வீட்டின் பூட்டை உடைத்து வைரம்,தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து வைரம்,தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளை

திருப்பத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் தங்க நகை, 2 சவரன் வைர நகை, அரை கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் தாலுக்கா, கந்திலி அடுத்த மேல் சுண்ணாம்பு காளை பகுதியை சேர்ந்த குலோத்துங்க சோழன் (45).முன்னாள் ராணுவ வீரர். இவரதுவீட்டில் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் முன்புறம் உள்ள சுவர் மீது ஏறி குதித்து உள்ளே சென்று கதவு மற்றும் பூட்டை உடைத்து வீட்டின் உள்ளே சென்றுள்ளனர்.

பின்னர் பீரோவில் இருந்த 2 லட்சம் மதிப்பிலான டைமண்ட் நெக்லஸ், 4 சவரன் டாலர் செயின், 2 சவரன் பிரேஸ்லெட், 3 சவரன் கழுத்து செயின், 3 சவரன், வளையல் குழந்தை வளையல் உட்பட 15 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கடந்த பத்து தினங்களுக்கு முன்பு குலோத்துங்க சோழனின் மாமனார் இறந்து போய் உள்ளார். இதனால் அவரது மனைவி ஜெயலட்சுமி மற்றும் அவரது மகன் திருப்பத்தூரில் இருந்து உள்ளனர்.

இந்த நிலையில் முன்னாள் ராணுவ வீரர் குலோத்துங்க சோழன் இரவில் வீட்டை பூட்டிவிட்டு திருப்பத்தூர் சென்று வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டில் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 15 சவரன் தங்க நகை 2 சவரன் வைர நகை, அரை கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *