வாணியம்பாடி அருகே சோலா பூரி அம்மன் திருவிழாவின் போது வீட்டில் உள்ள குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றுவதற்காக சுவிட்ச்சை போட்ட போது மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சங்கராபுரம் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி விநாயகம் என்பவரின் மனைவி இந்துமதி (36). கூலி வேலை செய்து வரும் இந்துமதி நேற்று அப்பகுதியில் சோலாபுரி அம்மன் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் காலையில் எழுந்து தனது வீடு மற்றும் அக்கம் பக்கத்தினர் வீடுகள் முன்பு கோலம் போட்டு விட்டு தனது வீட்டில் உள்ள குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றுவதற்காக அங்கிருந்த மோட்டார் சுவிட்சை ஆன் செய்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இது குறித்து தகவல் அறிந்து வந்த அம்பலூர் காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிராமத்தில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
