கொடைக்கானலில் அரசு அதிகாரிகள் உதவியோடு அனுமதியின்றி செயல்பட்டு வரும் கல் குவாரிகள் வெடிபொருள்களை கொண்டு பாறைகளை உடைப்பதால் குடியிருப்பு பகுதியில் வாழும் பொதுமக்கள்
பாதிப்படைவதாக
குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை பகுதிகளில் ஜேசிபி, கிட்டாச்சி, பாறை துளையிடும் இயந்திரங்களைக் கொண்டு நகர்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு வருகிறது்
இதுகுறித்து கொடைக்கானல் கோட்டாட்சியர் ,
வட்டாட்சியர், கிராம அலுவலர் போன்ற அதிகாரிகள் பல முறை தகவல் தெரிவிக்கப்படும் எந்த ஒரு நடவடிக்கைகள் எடுக்காததால் இன்று 50 மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் இயங்கி வரும் சட்டவிரோத குவாரியை முற்றுகையிட்டனர்.
கொடைக்கானல் பகுதியில் ஒரு கல்லைக்கூட எடுக்க அனுமதியில்லாத போது எப்படி இதுபோன்ற சட்டவிரோத குவாரிகள் இயங்குகின்றன என கேள்வி எழுப்பிய மக்கள், இதுதொடர்ந்தால் வயநாடு போல கொடைக்கானலும் பாதிக்கப்படும் என அச்சம் தெரிவித்தனர்.
பாறைகளை வெடிவைத்து தகர்க்கும் போது, பாறைகளின் உள்ள சிறு துகள்கள் குடியிருப்பு வீடுகளில் விழுவதால் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சமடைவதாகவும்
கூறுகின்றனர்
மேலும் முறையாக அனுமதியின்றி இயங்கி வரும் கனரக வாகனங்கள் மீது அபராதம் விதிக்க வேண்டும் எனவும், கனரக வாகனங்கள் பயன்படுத்துவதற்கு துணை போகும் அரசு அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கொடைக்கானல் மலைப்பகுதியை விட்டு ஜேசிபி, கிட்டாச்சி, பாறை துளையிடும் இயந்திரம் போர்வெல் போன்ற கனரக வாகனங்களை தரை தளத்திற்குஎடுத்துச் செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
