Headlines

விவசாயி வீட்டிற்கு விசிட் : மகிழ்ச்சியில் ஆழ்த்திய முதல்வர் விஜய்

விவசாயி வீட்டிற்கு விசிட் : மகிழ்ச்சியில் ஆழ்த்திய முதல்வர் விஜய்

மேட்டூர் சின்னக்கவூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமசாமியின் இல்லத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் சென்று சந்தித்தார்.

மேட்டூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக சின்னக்கவூர் கிராமத்திற்கு சென்ற முதலமைச்சர், விவசாயி ராமசாமியின் வீட்டிற்குச் சென்று அவரையும், அவரது குடும்பத்தினரையும் சந்தித்து நலம் விசாரித்தார்.

அப்போது, அங்கிருந்த வயதான மூதாட்டி ஒருவரை சந்தித்த முதலமைச்சர், தனது கண்ணாடியை அவருக்கு அணிவித்து மகிழ்ந்தார்.

முதலமைச்சரின் இந்த அன்பான செயலால் நெகிழ்ந்த மூதாட்டி, அவரை கட்டியணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இந்த நெகிழ்ச்சியான தருணம் அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.

மேலும், விவசாயி ராமசாமி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் நலம் விசாரித்த முதலமைச்சர், அவர்களின் விவசாய பணிகள், வாழ்வாதாரம் மற்றும் கிராமப்புற மக்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *