Headlines

கோவில் வழித்தடம் ஆக்கிரமிப்பு : காவல் ஆணையரிடம் புகார்

கோவில் வழித்தடம் ஆக்கிரமிப்பு : காவல் ஆணையரிடம் புகார்

திருப்பூர் மாவட்டம் தொட்டிய பாளையம் கிராமம், கஞ்சம் பாளையம் பகுதியில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கு 55 சென்ட் நிலம் உள்ளதாகவும், இப்பகுதியில் கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னோர்களின் நடு கற்களை வைத்து அருள்மிகு மாலை கோவில் வழிபாடு இச்சமுதாய மக்களால் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வழிபாடு நடைபெறும் இடத்தின் அருகில் உள்ள நில உரிமையாளர் ஒருவர் கோவிலுக்கு செல்லும் வழியை மறித்து ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு நடுகற்களை அப்புறப்படுத்தி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறத.

இது தொடர்பாக நில அளவை பதிவேடுகளில் ஆய்வு செய்தபோது தங்களுக்கு வழித்தடம் இருப்பதாகவும் தங்களுக்கு சொந்தமான இடத்திற்கு தங்களை அனுமதிக்காமல் கோவில் நடுக்கல் போன்றவற்றை சேதப்படுத்தியவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து தங்களது வழிபாட்டு உரிமையை மீட்டுக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து பாதிக்கப்பட்ட சமுதாய மக்கள் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *