தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் அவசர கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு புதுச்சேரி மாநில தலைவர் பொன் ராஜேந்திரன் தலைமை வகித்தார். பங்கேற்று பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் பொதுச் செயலாளர் பி. ஆர் பாண்டியன் தெரிவித்ததாவது,
மேட்டூர் அணையில் முதலமைச்சர் தண்ணீரை திறந்து வைத்துள்ளார். இதனை மாவட்ட அளவில் வருவாய்த்துறைநீர் பாசனத்துறை வேளாண்மை துறை காவல் துறை கொண்ட கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தி குளம் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளை நிரப்பிட வேண்டும்.
ஒரு போக சாம்பார் சாகுபடிக்கு 15 தினங்களுக்கு பிறகு விளைநிலங்களுக்கு தண்ணீரை கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மத்திய கால ரக பயிர்களை பயிரிட விவசாயிகளுக்கு தொழில் நுட்பங்களை வழங்க வேண்டும்.
தற்போதைய நிலையில் காவிரி டெல்டாவில் கோடை மழை பெய்யாததால் கோடை உழவு செய்ய முடியாமல் நேரடி விதைப்பும் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே 15 தினங்களுக்கு பிறகு சாகுபடிக்கு தண்ணீரை பாசனப் பகுதிகளுக்கு கொண்டு செல்லும் வகையில் சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்திட
வேண்டும்.
டிசம்பர்,ஜனவரி மாதங்களில்
கதிர் வரும் நிலையில்
பதராகாமல் பாதுகாக்க வேண்டும்.
காவிரி டெல்டா மரபை மீறிய 45 தினங்களுக்கு தண்ணீர் திறப்பு என்ற நீர்ப்பாசனத்துறை அறிவிப்பை முதலமைச்சர் திரும்ப பெற வேண்டும். ஜனவரி 28 வரை தண்ணீரை திறக்க வேண்டும்.
மேட்டூர் அணை மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 25 லட்சம் ஏக்கர் சாகுபடி மேற்கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்து தமிழக அரசு செயல்பட முன்வர வேண்டும்.
காவிரியின் குறுக்கே மேகதாட்டு அணை கட்ட சட்ட விரோதமாக முயற்சிக்கும் கர்நாடக முதலமைச்சர் டி கே சிவகுமார் தமிழகம் கடலிலே தண்ணீரை கலக்க செய்வதாக உண்மைக்கு புறம்பான பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
இதனை முறியடித்து கர்நாடக, தமிழக விவசாயிகள் நலன் கருதி பெருந்தலைவர் காமராஜர் அடிக்கல் நாட்டிய ராசிமணலில் புதிய அணை கட்டுவதற்கு திட்டமிட வேண்டும்.
மேகதாட்டு அணையை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி பிரச்சார பயணத்தை வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி பூம்புகாரில் துவக்க உள்ளோம்.
காவிரி டெல்டா மாவட்டங்கள் வழியாக ஈரோடு, தருமபுரி, வேலூர், சென்னை மற்றும் புதுச்சேரி மாநிலம் வழியாக சென்று செப்டம்பர் 24ல் திருவாரூரில் பிரச்சார பயணத்தை நிறைவு செய்ய உள்ளோம் என்றார்.
இந்த கூட்டத்தில் மாநிலத் தலைவர் ஆர். திருப்பதி மாநில கவுரவ தலைவர் நன்னிலம் நடராஜன், மாநில துணைச் செயலாளர் சுவாமிநாதன்,
தஞ்சை மண்டல செயலாளர் வேட்டங்குடி சீனிவாசன்,
புதுச்சேரி மாநில செயலாளர் சோமு, கடலூர் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் கருணைநாதன்,
திருவாரூர் மாவட்ட துணை தலைவர் கோவிந்தராஜ், மயிலாடுதுறை மாவட்ட தலைவர் முருகன், மாவட்ட துணை செயலாளர் பண்ணீர்செல்வம், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட தலைவர் நிழல்தாசன் உள்ளிட்ட மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள்
ஏராளமானோர் பங்கேற்றனர்.
